Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மக்களை கவரும் விமான நிலையம்- சிங்கப்பூரில் ஆச்சர்யம்!

    மக்களை கவரும் விமான நிலையம்- சிங்கப்பூரில் ஆச்சர்யம்!

    நாம் போக வேண்டிய ஊருக்கு செல்லக்கூடிய பேருந்து வர, இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால், நாமோ பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறோம். இப்போது பேருந்து வரும்வரை என்ன செய்யலாம் என்ற சிந்தனையிலேயே பாதி தலைவலியும் வெறுப்புணர்வும் வந்துவிடும். 

    ஒரு மணி நேர பேருந்துக்கே இந்த நிலைமை என்றால் விமான நிலையங்களில் மூன்று மணி நேரம் முதல் ஆறு மணி நேர காத்திருப்பு வரை நிகழும், சில சமயங்களில் இதற்கு மேலும் காத்திருப்பு நிகழும். அந்தக் காத்திருப்பின் போது ஏற்படும் வெறுப்புணர்வை கடப்பது சற்றே சிரமமானதுதான்.

    இப்படியான வெறுப்புணர்வை நீக்க அந்தந்த விமான நிலையங்ககள் சில முயற்சிகளை எடுத்த வண்ணம் இருந்தாலும் பெரிதாய் ஏதும் பலனளிக்கவில்லை. ஆனால், ஒரு விமான நிலையம் இதையெல்லாம் சுக்குநூறாக உடைத்திருக்கிறது. ஆம், அதுதான் சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையம்.

    அங்கு அப்படியென்ன இருக்கிறதென்றால், சூரியகாந்தி பூக்களின் பூங்கா, விளையாட்டு திடல்கள், திரையரங்குகள், சலூன்கள், அருங்காட்சியகங்கள், ஏகப்பட்ட உணவகங்கள், பல ஆயிரக்கணக்கான கணக்கில் சார்ஜ் போர்ட்கள் உள்ளன இவையெல்லாம் பயணிகளை ஈடுபாட்டுடன் வைத்திருக்க உதவுகிறது.

    மேற்சொன்னவை மட்டும் அல்லாது சறுக்கு மர ரீதியிலான ஸ்லைடுகள், உட்புற நீர்வீழ்ச்சிகள், தூங்க நல்ல இடங்கள், தானியங்கி கழிவறைகள், நீச்சல் குளம், வண்ணத்து பூச்சிகள் நிறைந்த பூங்கா என சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அங்கு வருவோர்களை பிரமிக்க வைத்து விடுகிறது. இந்தப் பிரம்மிப்பிலேயே பெரும்பாலான பயணிகள் தங்களின் காத்திருப்பை சாங்கி விமான நிலையத்தில் போக்குகின்றனர். 

    சர்வதேச அளவில், இந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையமானது 2009, 2010 மற்றும் 2011 ஆகிய வருடங்களில்  சிறந்த விமான நிலையத்திற்கான விருதை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    மனதை தேற்ற யுவன் பாடிய பாடல்; வாழ்வு என்பது இவ்வளவுதான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....