Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரோலக்ஸ் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

    ரோலக்ஸ் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

    ஆஸ்கருக்கு தேர்வுக்குழு உறுப்பினராக செல்லப்போகும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

    சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது குழுவின் கலை மற்றும் அறிவியல் பிரிவின் கீழ் உறுப்பினராக இணைவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட நடிகர் சூர்யாவுக்கு வந்த இந்த அழைப்பால் தென்னிந்திய திரையுலகமே ஆனந்தத்திலும், பெருமிதத்திலும் உள்ளது. 

    இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவை பாராட்டி பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அப்பதிவில், தம்பி சூர்யா, நட்சத்திரங்கள் நிறைந்த குழுவில் நீங்கள் காலடி எடுத்து வைப்பது மகிழ்ச்சி என்றும், உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

    கமல்ஹாசனின் இந்த பதிவிற்கு, ‘நன்றி அண்ணா’ என்று நடிகர் சூர்யா பதில் பதிவு செய்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து நடித்து சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில், நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் சம்பளமே பெறாமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்கருக்கு வாருங்கள்! நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....