Friday, March 15, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்குரூப்புகுள்ள குரூப்பு... 1000-துக்கு மேல சேர்ப்பு..? இனி 'ஜிபி' எல்லாம் ஜுஜுபி ! வாட்சப் கலக்கல்...

    குரூப்புகுள்ள குரூப்பு… 1000-துக்கு மேல சேர்ப்பு..? இனி ‘ஜிபி’ எல்லாம் ஜுஜுபி ! வாட்சப் கலக்கல் அப்டேட்ஸ்

    2 ஜிபி ஆவண பரிமாற்றம் உள்பட வாட்சப்பில் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    உலகில் அதிகளவு அனைவராலும் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்றச் செயலி என்றால் அது வாட்சப் செயலியே. தற்போது அனைத்து வயதினராலும் பயன்படுத்தப்படும் செயலியாகவும் வாட்சப் விளங்கி வருகிறது. அனைவரிடமும் வாட்சப் சென்று சேர்ந்ததன் முக்கியக் காரணம், பயன்படுத்த இது மிகவும் எளிதாக உள்ளதென்பதே. 

    இந்நிலையில், வாட்சப் நிறுவனம் அவ்வபோது தங்களது பயனர்களை ‘அப்டேட்’ மூலம் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கும். அந்த வகையில்தான் குரூப் சாட், இமோஜி, ஸ்டேட்டஸ், ஸ்டிக்கர் எனப் பல அம்சங்களை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 

    தற்போதும், இப்படியாக ஒரு புதிய அம்சத்தை வாட்சப் நிறுவனம் தங்களின் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்சப்-இல் சமூக குழுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள், துணைக் குழுக்களை ஒரு குறிப்பிட்ட பெயரின் கீழ் ஒருங்கிணைத்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, வாட்சப் விடியோ அழைப்பில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை இணைந்து கொள்ளவும், 2 ஜிபி வரையிலான ஆவணத்தைப் பரிமாற்றம் செய்துக்கொள்ளவும் ஏற்றபடி புதிய வசதி வாட்சப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    மேலும், வாட்சப் குழுவில் 1,024 பேரை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள முடியும் என்றும், ஒருவர் வாட்சப் சமூக குழுவில் இடம்பெற்றுள்ள 5,000 பயனாளர்களுக்கு தகவல்களை அனுப்ப முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களுக்குள் கருத்துக் கணிப்புகளை நடத்தும் வசதியும் வாட்சப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    இந்த வாரத்திற்குள் இந்த வசதிகள் அனைத்து வாட்சப் பயனர்களுக்கும் சென்று சேரும் என்று வாட்சப்பின் உரிமை நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது. 

    இதையும் படிங்க:200 வார்டுகளில்‌ 200 மழைக்கால மருத்துவ முகாம்கள்; மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....