Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகன்னியாகுமரி டூ ஜோத்பூர்.. விமானத்தில் பறந்த 'சினேரியஸ் கழுகு' எதனால் தெரியுமா?

    கன்னியாகுமரி டூ ஜோத்பூர்.. விமானத்தில் பறந்த ‘சினேரியஸ் கழுகு’ எதனால் தெரியுமா?

    நாகர்கோயிலில் மீட்கப்பட்ட சினேரியஸ் கழுகு ராஜஸ்தானுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் என்ற பகுதியில் 2017 ஆம் ஆண்டு ஒக்கி புயலின்போது பாதிக்கப்பட்ட சினேரியஸ் என்ற வகை கழுகு வனத்துறையினரால் மீட்கப்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து அக்கழுகுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் புயலின் நினைவாக கழுகுக்கு ‘ஒக்கி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

    பிறக, இந்தக்கழுகு நாகர்கோயிலில் உள்ள உதயகிரி உயிரியல் பூங்காவில் முறையாக பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. தற்போது அந்தக் கழுகு காட்டில் வாழக்கூடிய உடல்நிலையை பெற்றுவிட்டதால், அதனை அதன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. 

    சினேரியஸ் வகை கழுகுகள் வாழக் கூடிய பருவக்காலத்தை கருத்தில் கொண்டு, அதனை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது. 

    இதற்காக, மத்திய விமான அமைச்சகத்தின் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்தது.  இதையடுத்து, நேற்று சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் ஜோத்பூரில் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

    இதையும் படிங்க: குரூப்புகுள்ள குரூப்பு… 1000-துக்கு மேல சேர்ப்பு..? இனி ‘ஜிபி’ எல்லாம் ஜுஜுபி ! வாட்சப் கலக்கல் அப்டேட்ஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....