Saturday, March 23, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்ட்விட்டரைத் தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் கட்டணம்; பயனர்கள் அதிர்ச்சி!

    ட்விட்டரைத் தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் கட்டணம்; பயனர்கள் அதிர்ச்சி!

    ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன் சமூகவலைதளங்களிலும் இனி ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 

    உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பிரபல சமூகவலைதளங்களாக இயங்கி வருபவை ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம். இத்தளங்களில், பொதுவாக பிரபலமான நபர்கள், புகழ்பெற்றவர்கள் உள்ளிட்டோரின் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற பக்கங்கள் அவர்களின் அதிகாரபூர்வ பக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் ப்ளூ டிக் வசதி அந்தந்த நிறுவனங்களால் அளிக்கப்படுகிறது. 

    இந்த ப்ளூ டிக் வசதிக்கு சமீபத்தில் கட்டணம் விதித்து ட்விட்டர் நிறுவனம், அதன் பயனர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. பலர் இதற்கு எதிராக தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்தனர். இருப்பினும், இந்த நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. 

    இந்நிலையில், ட்விட்டரைத் தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக்கிற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ப்ளூடிக் பெற ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு மாதத்திற்கு 11.99 டாலரும் ஐஓஎஸ் பயனர்களுக்கு 14.99 டாலரும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த கட்டண சேவை இந்த வாரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், விரைவில் மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    தனுஷின் ‘வாத்தி’ வசூலில் தேர்ந்ததா? இல்லையா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....