Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்ஆன்ட்ராய்டு டூ ஐபோன்: வாட்சப் தரவுகளை மாற்றுவது எப்படி??

    ஆன்ட்ராய்டு டூ ஐபோன்: வாட்சப் தரவுகளை மாற்றுவது எப்படி??

    கடந்த வருடம் ஐபோனிலிருந்து ஆன்ட்ராய்டு தளத்திற்கு பயனர்களின் தரவுகளை மாற்றுவதற்கான வசதியினை வாட்சப் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. தற்போது ஆன்ட்ராய்டு பயனர்கள் தங்களது வாட்சப் தரவுகளை ஐபோனிற்கு மாற்றும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

    மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த தகவலினைப் பகிர்ந்துள்ளார். இந்த வசதியின் மூலம் பயனர்கள் தங்களது வாட்சப் தரவுகளை (புகைப்படம் முதற்கொண்டு) ஆன்ட்ராய்டு இயங்கு தளத்திலிருந்து, ஐபோன் இயங்குதளத்திற்கு மிக எளிதாக மாற்றிக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அழைப்பு வரலாற்றினை மட்டும் மாற்றிக்கொள்ள முடியாது என்றும் அவர் பதிவிட்டிருந்தார். பயனர்களுக்கு இடையில் மட்டுமே தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றது, இரு நபர்கள் பேசும் தரவுகளை வாட்சப் நிறுவனம் சேமித்து வைத்திருப்பதில்லை (end-to-end encryption) என்று சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையின்படி இந்த செயல்படானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    ஐபோன் இயங்குதளத்தின் பதிப்பு (version) 5 முதல் 15.5 வரை உள்ள பயனர்கள் இந்த வசதியினைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் வாட்சப் நிறுவனம் அறிவித்துள்ளது. 

    பீட்டா பதிப்பில் இன்று வெளியாகும் இந்த வசதியானது இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து பயனர்களுக்கு சென்றடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், இந்த வசதியினை செயல்படுத்த ஐபோனில் இருக்கும் வாட்சப்பின் பதிப்பு (version) 2.22.10.70ஆகவும், ஆன்ட்ராய்டு சாதனத்தில் வாட்சப்பின் பதிப்பு (version) 2.22.7.74ஆகவும் இருக்கவேண்டும்.

    தரவுகளை மாற்றிக்கொள்வதற்கு முன்பு ஐபோன் பயனர்கள் தங்களது தரவுகளை சேமித்து (backup) வைத்துக்கொள்ள வேண்டும். தரவு மாற்றத்தின் போது ஏதும் பிரச்சனைகள் ஏற்படின், அதனால் உண்டாகும் இழப்புகளைத் தவிர்க்க இந்த சேமிப்பானது பயன்படும்.

    மேலும், இந்த தரவு மாற்றமானது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், வாட்சப் நிறுவனம் இந்த தரவு மாற்றத்தினைக் கண்காணிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

    தரவு மாற்றத்திற்கான படிநிலைகள்..

    1. தரவு மாற்றத்திற்கு முன்பு, இரண்டு சாதனங்களையும் (ஐபோன், ஆன்ட்ராய்டு) மின்னிணைப்பு செய்ய வேண்டும். இரண்டு சாதனங்களும் வைஃபையுடன் இணைத்திருக்க வேண்டும்.
    2. தரவு மாற்றத்திற்கு முன்பு ஐபோனின் அமைப்புகள் பக்கத்திற்குச் சென்று        போனினை மீட்டமைப்பு (reset) செய்ய வேண்டும்.
    3. கூகிள் பிளேஸ்டோரில் இருக்கும் மூவ் டு ஐபோன் என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கூறியுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.
    4. பிறகு, ஆன்ட்ராய்டு போனில் உள்ள ஸ்டார்ட் என்னும் பொத்தானைத் தொடுவதன் மூலம் அனைத்து தரவுகளையும் ஐபோனிற்கு மாற்றம் செய்யலாம்.
    5. இந்த செயலுக்குப்பிறகு ஆன்ட்ராய்டு தளத்தில் இருக்கும் வாட்சப் கணக்கானது நீக்கப்பட்டுவிடும்.
    6. இதற்குப் பிறகு ஐபோனில் வாட்சப் செயலியைப் பதிவிறக்கம் செய்து உங்களது செல்போன் எண்ணினைக் கொண்டு உள்நுழைய, பழைய தரவுகளுடன் உங்களது வாட்சப் கணக்கினை ஐபோனில் பெறலாம்.

    5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம்; என்ன நடக்கப்போகிறது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....