Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு; முதுகில் டாட்டூ! - அசத்திய ரசிகர்!

    விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு; முதுகில் டாட்டூ! – அசத்திய ரசிகர்!

    நடிகர் விஜயின் பிறந்தநாள் இந்த மாதம் 22ம் தேதி கொண்டாடும் விதமாக தனது முதுகில் விஜயின் முகத்தை ரசிகர் ஒருவர் பெரிய டாட்டூவாக வரைந்துள்ளார்.

    திரைப்பட நடிகர், பாடகர் என பன்முகத்திறன் வாய்ந்தவர் விஜய். தனது நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்துள்ளவர்.  தனது ரசிகர்களால் அன்பாய் தளபதி விஜய் என அழைக்கப்படும் திரைப்பட நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாள் வருகிற 22ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. விஜயின் பிறந்தநாளை கேக் வெட்டியும், மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியும் கொணடாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

    master

    சேலத்தைச் சேர்ந்த விஜயின் தீவிர ரசிகரான ராஜ்பாரதி, நடிகர் விஜயின் பிறந்த நாளினைக் கொண்டாட, பிரபல டாட்டூஸ் டிசைனரின் கைவண்ணத்தில் தனது முதுகில் நடிகர் விஜயின் முகத்தினை பெரிய அளவில் பச்சை குத்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இந்த டாட்டூ வரைவதற்கு 16மணிநேரம் எடுத்துக் கொண்டதாகவும், இந்த டாட்டூவை வரைந்து கொண்டதன் மூலம் நிச்சயம் விஜயை நேரில் சந்திக்கும் நீண்டநாள் கனவும் நனவாகக்கூடும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினார்.

    தமிழக பள்ளிகளில் இவ்வளவு காலியிடங்களா? ; புள்ளி விவரங்களுடன் அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....