Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக பொதுச் செயலாளர் ஆவாரா எடப்பாடி பழனிச்சாமி? ஓபிஎஸ் தெரிவித்த கண்டனம்!

    அதிமுக பொதுச் செயலாளர் ஆவாரா எடப்பாடி பழனிச்சாமி? ஓபிஎஸ் தெரிவித்த கண்டனம்!

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த திருப்பங்களால் ஒற்றைத் தலைமைதான் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வருகிறது.

    இரட்டை தலைமையால் எந்த வித முடிவையும் நியாயமாக எட்ட முடியவில்லை. மேலும் உட்கட்சி பூசல் அதிகரிக்கின்றது, சசிகலா அதிமுகவை கைப்பற்ற முனைப்பு காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. வரும் 23 ஆம் தேதி பொதுக் கூட்டம் கூட்டப்படுகிறது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர், அதிமுக அவைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முன்னதாக நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் ஒற்றைத் தலைமைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் அவர்களின் ஆதரவாளர்களும் ஒற்றைத் தலைமை கோரிக்கையை எழுப்பினர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    அதிமுக வட்டாரத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் முழு பொறுப்பையும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்க வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து கூறியதாக தெரிவித்தனர்.

    மாவட்டச் செயலாளர்களில் மத்தியில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோரின் முடிவு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாக வந்த தகவலை ஓபிஎஸ் மறுத்தார். மேலும், வெறும் மாவட்டச் செயலாளர்கள் கூறுவதை மட்டும் வைத்து கட்சியை அவரிடம் கொடுத்துவிட முடியாது. அவர் (எடப்பாடி) முதல்வராக இருந்தார் என்றால் நானும் தான் முதல்வராக இருந்துள்ளேன் என்று கூறினார்.

    சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் அம்மா (ஜெயலலிதா) சிறை சென்ற போது கட்சியையும் ஆட்சியையும் என்னிடத்தில்தான் ஒப்படைத்தார். எனவே பொதுக்குழு கூட்டத்தில் நானும் எடப்பாடி பழனிச்சாமியும் வேட்பாளர்களாக நிற்கின்றோம். யாருக்கு பெரும்பாலான ஆதரவு கிடைக்கின்றதோ அவர்கள் கட்சியை தங்களின் தலைமையின் கீழ் வைத்துக் கொள்ளலாம்.

    தேர்தலே இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுப்பது, அவரையே ஒற்றைத் தலைமை ஆக்குவது என முயற்சித்தால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இணை ஒருங்கிணைப்பாளரின் அனுமதியை பெறாமல் யாரை வேண்டுமானாலும் கட்சியிலிருந்து நீக்க முடியும் என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாக ஓபிஎஸ் சொன்னார் என்கிறார்கள்.

    அரசியல் விமர்சகர்கள் அதிமுகவில் நிலவும் இச்சூழ்நிலை குறித்து கருத்து கூறுகையில், டெல்லி தலைமையின் ஆதரவு மற்றும் மாவட்டச் செயலாளர்களில் 85 சதவீதம் பேரின் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதால் அவர் அதிமுகவைக் கைப்பற்ற தீவிரம் காட்டி வருவதாகவும் வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளராகவோ அல்லது தலைமை ஒருங்கிணைப்பாளராகவோ தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள். இதனிடையே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அவரது வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

    5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம்; என்ன நடக்கப்போகிறது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....