Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம்; என்ன நடக்கப்போகிறது?

    5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம்; என்ன நடக்கப்போகிறது?

    இந்தியாவை பொறுத்தவரையில் செல்போன் பயனாளர்கள் தற்போது 4ஜி இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 4ஜி மூலம் அதிவேக இணைய சேவையை பயனாளிகள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இதனை விட அதிவேக இணைய சேவையை பெரும் பொருட்டு 5ஜி சேவையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும் 5ஜி நடைமுறைக்கு வந்தால் 4ஜியைக் காட்டிலும் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    அதன்படி, தொலை தொடர்புத்துறையை மேம்படுத்த 2022ஆம் ஆண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் எனவும், 2023ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது.

    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 5-ஜி சேவைக்காக ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்துவதற்கான தொலைத்தொடர்புத் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் ஜூலை மாத இறுதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெற உள்ளது. ஏலத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 5-ஜி சேவை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும்.

    தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செலவைக் குறைக்க 72097.85 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்படுகிறது. நாட்டின் மூன்று முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் ஐடியா, ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஜியோ ஆகியவை இந்த ஏலத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செலவைக் குறைப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏர் வேவ்களுக்கான முன்பணத்தை நீக்கியதோடு ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனங்கள் 5-ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகையை 20 மாத தவணையில் செலுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

    5G சேவை மூலம் நவீன வணிகங்கள் உருவாக்குவதற்கும், நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாயை உருவாக்குவதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் சாத்தியம் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 5ஜி அலைக்கற்றை 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட உள்ளது. முன்னதாக, இந்தியாவில் 5ஜி தொழில்நுடப்பத்தை உருவாக்குவதற்காக இந்தியாவின் 8 தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு 5ஜி சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    காவல் வாகனத்தின் மேல் ஒரு உல்லாசப்பயணம் சென்ற வாலிபர்..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....