Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாவல் வாகனத்தின் மேல் ஒரு உல்லாசப்பயணம் சென்ற வாலிபர்..!!

    காவல் வாகனத்தின் மேல் ஒரு உல்லாசப்பயணம் சென்ற வாலிபர்..!!

    குடிபோதையில் இருந்த ஒருவர் காவல் வாகனத்தின் மீது ஏறி உல்லாசமாக பயணம் செய்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

    ஹைதராபாத் மாகாணத்தில் இருந்த ஆசிப் நகர் பகுதியில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததாக அந்த பகுதியிலிருந்த மக்கள் அளித்த புகாரின் பெயரில் காவல் துறையினர் ஆசிப் நகருக்கு சென்றுள்ளனர்.

    காவலர்களின் வருகையினைக் கண்ட அந்த குடிமகன், முதலில் ஓடி மறைந்தாலும் கையில் கோடரி போன்ற ஆயுதத்துடன் திரும்பி வந்ததாக காவலர் ஒருவர் கூறியுள்ளார்.

    போக்குவரத்து நெரிசலில் காரணமாக மெதுவாக வந்த காவல் வாகனத்தின் மீது ஏறிய குடிமகன், சட்டை ஏதும் அணியாமல் வாகனத்தின் கூரையில் அமர்ந்த படி பயணம் செய்துள்ளார். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்காத காவலர்களும் சில தருணங்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

    குடிமகனின் இந்த செயலால் காவல் வாகனத்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து போனது.

    இந்த காணொளியினைப் பகிர்ந்த தெலுங்கானா பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ. ரேவந் ரெட்டி, ‘மதுவானது கற்பழிப்பு மற்றும் கொலைகளை மட்டும் ஏற்படுத்துவது இல்லை. காவல் வாகனங்கள் மீதான தாக்குதல்களையும் உண்டாக்குகின்றன.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    திங்கள் கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தினை அரங்கேற்றிய நபரின் பெயர் அஜய் சிங் என்று பின்னர் தெரியவந்துள்ளது. அவருக்கு வயது 28.

    ‘இது குடிபோதையினால் உருவான தகராறு. அஜய் சிங் அந்த பகுதியில் கூச்சலிட்டது மட்டுமின்றி வருவோர் போவோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மக்கள் அளித்த புகாரின் பேரில் ஆசிப் நகருக்குச் சென்ற காவலர்கள் அந்த பகுதியை மீண்டும் அமைதி நிலைக்குக் கொண்டு வந்தனர்.’ என்று தனியார் செய்திக்குப் பேட்டியளித்த காவலர் ஒருவர் கூறியுள்ளார்.

    அவரைக் கைது செய்ய காவலர்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும் அந்த காவலர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு; ராணுவத்தினர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....