Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு; ராணுவத்தினர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை!

    தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு; ராணுவத்தினர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை!

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து மாநிலத்தில் மியான்மர் எல்லையினை ஒட்டியுள்ள மோன் மாவட்டத்தில்,
    என்.எஸ்.சி.என் (கே) மற்றும் உல்ஃபா ஆகிய கிளர்ச்சிக்குழுக்கள் பலம் பொருந்தியவர்களாக உள்ளனர்.

    இவர்களை ஒடுக்கும் பணியில் அங்கு இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி சுரங்க பணிக்கு சென்றுவிட்டு மாலை வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக் கருதி, ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் அங்கிருந்த இந்தியப் படையினருக்கு எதிராக போராட்டம் நடத்திய போது உண்டான வன்முறையில் மேலும் எட்டு குடிமக்கள் கொல்லப்பட்டனர். இந்த வன்முறையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார்.

    உள்ளூர் தீவிரவாத குழுக்களின் ஆயுதப் போராட்டம் காரணமாக நாகாலாந்து மாநிலத்தில் கடந்த பல ஆண்டு காலமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன. நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அம்மாநிலம் சமீபத்தில் எதிர்கொண்ட வன்முறைகளில் மிகவும் மோசமானதாகும்.

    குடிமக்கள் மீது தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு மன்னிப்பு கேட்ட இந்திய ராணுவம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அப்போது தெரிவித்திருந்தது.

    இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தினை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் இந்திய அரசின் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஏனெனில் இந்த மத்திய சட்டம் தவறுதலாக பொதுமக்களைக் கொலை செய்யும் இந்தியப் படையினர் மீது எவ்வித விசாரணையும் நடத்த முடியாது என்பது இந்த சட்டத்தில் ஓர் பாதகமாக உள்ளது.

    நாகாலாந்து, அசாம், மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் இந்த சட்டம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்திய அரசால் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடரினைத் தக்கவைத்த இந்திய அணி.. கெய்க்வாட், இஷான் அபாரம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....