Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மாணவர்களே! செல்போனை பள்ளிக்கு எடுத்து வர வேண்டாம்: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

    மாணவர்களே! செல்போனை பள்ளிக்கு எடுத்து வர வேண்டாம்: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

    தமிழகம் முழுவதும் கடந்த திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாவின் விலை உயர்வு பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா காலத்தில், ஆன்லைனில் கல்வி கற்பதற்காக, அனைத்து மாணவர்களும் செல்போனை பயன்படுத்த தொடங்கினர்.

    தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதால், ஆன்லைன் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக் கூடாது; மீறினால், செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    ‌திருச்சியில், கிழக்கு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பட்டா மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இவர் பயனாளிகளுக்கு பட்டாவை வழங்கி விழாவை சிறப்பித்தார்.

    இந்நிகழ்ச்சியில், 322 பேருக்கு பட்டா, 20 பேருக்கு குடும்ப அட்டை, 6 மாற்று திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் மற்றும் 64 பேருக்கு கல்மந்தை காலணியில் குடியிருப்பு ஒதுக்கீடு உள்பட நல திட்டங்கள் ரூபாய் 60,22,510 மதிப்பில் வழங்கப்பட்டது.

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி..

    பிறகு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் எடுத்துக்கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும். மாணவர்களின் கவனச் சிதறலை நீக்கும் விதமாக, பள்ளிகளில் முதல் 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும். பின்பு தான் வகுப்புகள் துவங்கும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கியதும், தன்னார்வ அமைப்புகள் மற்றும் காவல் துறையைக் கொண்டு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும்.

    நீட் தேர்விற்கு எதிரான சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாங்கள் கொடுத்த அழுத்தத்தினால் மட்டுமே, ஆளுநர் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். எந்தவித சட்டப் போராட்டமாக இருந்தாலும், முதல்வர் அதில் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை எனக்குள்ளது.

    GST நிலுவைத் தொகையை உடனே வழங்குமாறு, பிரதமரிடம் முதல் அமைச்சர் நேரடியாக கோரிக்கை வைத்தார். இதன் காரணமாக GST நிலுவைத் தொகை தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. முதலமைச்சர் கொடுக்கும் குரல் நியாயமான குரல் என ஒட்டுமொத்த இந்திய நாடே ஒப்புக்கொள்கிறது. அதுபோல நீட் தேர்வையும் இரத்து செய்து வெற்றி பெறுவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

    மேலும் அவர் பேசுகையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சீறுடை மற்றும் புத்தகங்களை பள்ளிகளிலேயே வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது. 12 வயதுக்கு மேற்பட்ட 90%-க்கு அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, தொடர்ந்து உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இந்த கல்வியாண்டில் 9,494 புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த இருக்கிறோம். பள்ளிகள் திறக்கப்பட்டாலும், இல்லம் தேடி கல்வியின் தேவை இன்னமும் இருக்கிறது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தை, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளோம். 2 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த கல்வியாண்டில் தான் வழக்கம் போல, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளிகள் இயங்கி வந்தால் மட்டுமே, இல்லம் தேடி கல்வித் திட்டத்தை படிப்படியாக நாம் நிறுத்த முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

    தொடரினைத் தக்கவைத்த இந்திய அணி.. கெய்க்வாட், இஷான் அபாரம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....