Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதொடரினைத் தக்கவைத்த இந்திய அணி.. கெய்க்வாட், இஷான் அபாரம்..

    தொடரினைத் தக்கவைத்த இந்திய அணி.. கெய்க்வாட், இஷான் அபாரம்..

    நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

    தென் ஆப்ரிக்கா அணியானது ஐந்து 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்துள்ளது. ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2-0 என்கிற முறையில் முன்னணியில் இருந்தது.

    இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சினைத் தேர்ந்தெடுத்தது. முக்கியமான போட்டியாகையால், இந்திய அணியில் எந்த வித மாற்றமும் இன்றி களமிறங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை அடித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். 35 பந்துகளை எதிர்கொண்ட கெய்க்வாட், 57 ரன்களைக் (7 ஃபோர், 2 சிக்ஸர்கள்) குவித்தார். அதே 35 பந்துகளை எதிர்கொண்ட இஷான், 54 ரன்களை (5 ஃபோர், 2 சிக்ஸர்கள்) அடித்தார். இந்த ஜோடியானது பத்து ஓவர்களுக்கு 97 ரன்கள் அடித்தது.

    இஷான் மற்றும் கெய்க்வாட் ஆகியோரின் ஆட்டமிழப்பிற்குப் பிறகு களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையிலும், தென் ஆப்ரிக்க அணி பந்து வீச்சாளர்களின் திறமையான பந்து வீச்சினாலும் இறுதி ஓவர்களில் பெருமளவு ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய அணியானது 12 ஓவர்களுக்கு 120 ரன்கள் முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா 31 ரன்கள் அடித்திருந்தார்.

    180 ரன்கள் ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டினையும் இழந்து 131 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது.

    அணியில் அதிகபட்சமாக க்ளாஸென் 29 ரன்களும், ஹென்றிக்ஸ் 23 ரன்களும், பார்னெல் 22 ரன்களும், பிரிடோரியஸ் 20 ரன்களும் அடித்தனர். சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ஹர்ஷல் படேல் நான்கு விக்கெட்டுகளையும், யுவேந்திர சஹால் மூன்று விக்கெட்டுகளையும், அக்சார் படேல் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.

    இரண்டு கேட்ச்சுகள் மற்றும் மூன்று விக்கெட்டுகளை எடுத்ததற்காக சஹாலுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தனது வெற்றி வாய்ப்பினைத் தக்க வைத்துள்ளது இந்திய அணி. அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரினை வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது போட்டியானது வரும் வெள்ளிக்கிழமை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறுகிறது.

    புதுமண தம்பதிகள் வெட்டிக் கொலை: கும்பகோணத்தில் பரபரப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....