Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கணவரை கொலை செய்த 'உங்கள் கணவரை எப்படிக் கொல்வது..?' கட்டுரையின் எழுத்தாளர்!

    கணவரை கொலை செய்த ‘உங்கள் கணவரை எப்படிக் கொல்வது..?’ கட்டுரையின் எழுத்தாளர்!

    உங்கள் கணவரை எப்படிக் கொல்வது..? புத்தகம் எழுதிய பிரபலமான பெண் எழுத்தாளருக்கு கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவில் பெண் எழுத்தாளர் நான்சி கிராம்ப்டன் ‘கணவரை கொலை செய்வது எப்படி?’ என்ற கட்டுரையின் மூலம் பிரபலமானார். இவருக்கு 71 வயது. இவருக்குஎ தனது கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்சியின் சஸ்பென்ஸ் படைப்புகளில் தி ராங் ஹஸ்பண்ட் மற்றும் தி ராங் லவ்வர் போன்ற நாவல்களும் அடங்கும். பல நாவல்களை எழுதியுள்ள நான்சி கிராம்ப்டனின் கணவருமான சமையல் கலை நிபுனருமான டானியல் கிரெய்க், கடந்த 2008ம் ஆண்டு அவர் சமையல் வகுப்புகள் நடத்தி வந்த நிறுவனத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

    அவரது பெயரில் இருந்த 9 கோடி இன்சூரன்ஸ் பணம் மற்றும் இரண்டேகால் கோடி பணமும் நான்சி வசம் சென்றது. கொலை நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு நான்சி இருந்தது தெரியவந்தது. மேலும், இன்சூரன்ஸ் பணத்துக்காக அவரை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும், இது தொடர்பாக நடந்த விசாரணையில் தான் ஒரேகான் மாகாண நீதிமன்றம், நான்சிக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. விசாரணையில் “என் நாவல் ஆராய்ச்சிக்காகவே துப்பாக்கியை வாங்கினேன்” என நான்சி தெரிவித்தார். மேலும் “நான் எந்தத் திட்டமும் இல்லாமல்தான் ‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ என்ற கட்டுரையை எழுதினேன். அதில் எந்த நோக்கமும் இல்லை. நீங்கள் நினைப்பதுபோல் எனது கணவரை கொல்வதற்காக அந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை” என்று கூறினார்.

    தனது கணவரை கொல்வதற்கு 7 வருடங்களுக்கு முன்னர்தான் ‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ என்ற கட்டுரையை நான்சி எழுந்தி இருந்தார். இதன் காரணமாக இவரது வழக்கு அமெரிக்காவில் பரவலாக பேசப்பட்டது.

    தொடரினைத் தக்கவைத்த இந்திய அணி.. கெய்க்வாட், இஷான் அபாரம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....