Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட 'போகேஸ்வரன்' காட்டு யானை உயிரிழப்பு

    ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட ‘போகேஸ்வரன்’ காட்டு யானை உயிரிழப்பு

    அண்மைச் செய்திகளில், “கபினி அணையின் பின்புறம் உள்ள பந்திப்பூர் வனப்பகுதிகளில் வாழ்ந்து வந்த காட்டு யானை ஒன்று ‘போகேஸ்வரன்’, ‘கபினி’ என பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்தது.

    இந்த யானை ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்டிருந்தது. தந்தங்களின் நீளம் சுமார் 7 அடி முதல் 8 அடி வரை இருந்தது. இவை தும்பிக்கை போன்று தரையில் படும் அளவுக்கு நீளமாக இருந்தது.

    இத்தகைய சிறப்புகளைக் கொண்ட போகேஸ்வரன் யானைக்கு வயது 68. வனத்துறை ஊழியர்கள் பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்துக்குட்பட்ட குன்றே வனப்பகுதியில் ரோந்து சென்ற போது அங்குள்ள போகேஸ்வரர் கோவிலின் அருகே ‘போகேஸ்வரன்’ காட்டு யானை இறந்து கிடந்ததைக் கண்டுள்ளனர்.

    இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் யானையின் 2 தந்தங்களையும் வெட்டி எடுத்தனர். இதையடுத்து யானையின் உடல் கபினி அணை அருகே புதைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருந்தினர்கள் வருவாங்க….விழிப்புணர்வு தேவை – இன்றைய ராசிபலன்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....