Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வீட்ல விஷேசம் திரைப்படத்திற்காக ஆர்ஜே பாலாஜி இவ்வளவு செய்கிறாரா?

    வீட்ல விஷேசம் திரைப்படத்திற்காக ஆர்ஜே பாலாஜி இவ்வளவு செய்கிறாரா?

    தமிழ் சினிமாவில் காமெடி கலந்த நடிகராக வலம் வருபவர் ஆர்ஜே பாலாஜி. LKG மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் தனது நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார். இவருடைய நடிப்பில் வெளிவரவுள்ள ‘வீட்ல விசேஷம்’ படத்திற்கு மிகவும் பிரம்மாண்டமான முறையில் புரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.

    ரேடியோ ஸ்டேஷனில் ஆர்ஜேவாக தன் பயணத்தைத் தொடங்கிய ஆர்ஜே பாலாஜி, தற்போது நடிகர் மற்றும் இயக்குநர் என தமிழ் சினிமாவின் பன்முகத் திறமை கொண்ட கலைஞராக முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    தற்போது, வீட்ல விசேஷம் என்ற புதிய படத்தை இயக்கி, படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. இவருடன் இணைந்து, என்ஜெ சரவணனும் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜி ஸ்டுடியோஸ் உடன் கைகோர்த்து, போனி கபூரின் பேவியூ பிராஜக்ட்ஸ் நிறுவனம் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரித்துள்ளன.

    நடிகை அபர்ணா பாலமுரளி இப்பத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ், இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாக நடித்துள்ளார். நடிகை ஊர்வசி அம்மா கேரக்டரில் நடித்துள்ளார். இந்தி மொழியில் சூப்பர் ஹிட்டான ‘பதாய் ஹோ’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீட்ல விசேஷம் படமானது, வருகின்ற ஜூன் மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆகையால், படக்குழுவினர் அனைவரும் புதுமையான பல வழிகளில் திரைப்படத்தை ப்ரொமோட் செய்து வருகின்றனர். “குழந்தை பெற்றுக் கொள்ள வயது ஒரு தடையில்ல” எனும் சமூக கருத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. ஆகவே, இப்படம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காண்பித்து வருகின்றனர் படக்குழுவினர்.

    ஏற்கனவே, பல புதுமையான வித்தியாசமான முறைகளில் படத்திற்கு புரமோஷன் செய்துள்ளனர். முன்பின் தெரியாத நிகழ்ச்சிகளில், சர்ப்ரைஸ் விசிட்டாக செல்வது, தியேட்டர்கள் மற்றும் ஷாப்பிங் மால்களில் திருமண வீடு போன்ற செட் அமைப்பது மற்றும் நேர்காணல்கள் என பல வழிகளில் விறுவிறுப்பாக படத்தை ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

    டீ மற்றும் காபியை ஆன்லைனில் ஆர்டர் செய்தால், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கன்டெயினரில் கொண்டு வரப்படும். தற்போது இந்த கண்டெயினர்களிலும் படத்தின் ப்ரமோஷன் இடம் பெற்றுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தேவயானி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில், ஆர்ஜே பாலாஜி மற்றும் அபர்ணா பாலமுரளி இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

    பல வித்தியாசமான முறைகளில் படத்திற்கு ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

    மாணவர்களே! செல்போனை பள்ளிக்கு எடுத்து வர வேண்டாம்: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....