Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபோதைக்கு அடிமையான கணவனின் முகத்தில் கொதிக்கும் ரசத்தினை ஊற்றிய மனைவி!!

    போதைக்கு அடிமையான கணவனின் முகத்தில் கொதிக்கும் ரசத்தினை ஊற்றிய மனைவி!!

    மதுவிற்கு அடிமையாகி தினமும் தொந்தரவு செய்து வந்த கணவனின் முகத்தில் அவரது மனைவி கொதிக்கும் ரசத்தினை ஊற்றிய சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஜெயம்கொண்டான் கிராமத்தினைச் சேர்ந்தவர் நடராஜன், வயது 30. இவருடைய மனைவியின் பெயர் குப்பம்மாள்.

    பேருந்து நிலையத்தில் தின்பண்டங்களை விற்று பிழைப்பு நடத்தி வரும் நடராஜன், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் கிடைக்கும் வருமானத்தில் பெருமளவு பகுதியினை மதுவிற்காக செலவழித்து வந்துள்ளார்.

    குடிப்பது மட்டுமின்றி, வீட்டிற்குச் சென்று தனது மனைவியிடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நடராஜனின் தொந்தரவினைப் பொறுக்க முடியாமல் குப்பம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    நடராஜனைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்து காவலர்கள் அனுப்பிய பிறகும் குப்பம்மாளிடம் தகராறில் ஈடுபடவே இரண்டாவது முறையாக காவல் நிலையத்தில் புகாரளித்தார் குப்பம்மாள்.

    குப்பம்மாள் தன் தன்னைத் தொந்தரவு செய்வதாகவும், அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் காவலர்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நடராஜன், பிளேடினை உபயோகித்து தனது கழுத்தினை அறுத்துக்கொள்ளவும் முயற்சித்துள்ளார். அவரை மீண்டும் கண்டித்து அனுப்பியது காவல்துறை.

    இந்த நிலையில், எந்த வித மாறுதலும் இன்றி தொடர்ந்து தொந்தரவில் ஈடுபட்டு வந்துள்ளார் நடராஜன். மது அருந்திவிட்டு நேற்றும் தொந்தரவு கொடுத்த நிலையில், பொறுமை இழந்த குப்பம்மாள் கொதித்துக் கொண்டிருந்த ரசத்தினை நடராஜனின் முகத்தில் ஊற்றியுள்ளார்.

    குப்பம்மாள் அவர்களே வலியில் துடித்த நடராஜனை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். வெந்து போன முகத்துடன் வந்திருந்த நடராஜனை சிகிச்சைக்காக காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    தினமும் சம்பாதித்த வருமானத்தினை குப்பம்மாளிடம் கொடுப்பதாகவும், அவர் தான் தன்னைத் துன்புறுத்துவதாகவும், அவரைக் கைது செய்யும்படியும் மீண்டும் குடிபோதையில் நடராஜன் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    நடராஜனின் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவலர்கள் மேற்படி விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாணவர்களே! செல்போனை பள்ளிக்கு எடுத்து வர வேண்டாம்: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....