Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் புது வேட்பாளர்!

  குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் புது வேட்பாளர்!

  இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

  இதனை கருத்தில் கொண்டு ஜூலை 18ம் தேதி குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டின் 16வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி அன்று நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும். இந்த தேர்தலில் 776 எம்பிக்களும், 4,033 எம்எல்ஏக்களும் வாக்களிக்கவுள்ளனர்.

  இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சி வேட்பாளர் தொடர்பாக டெல்லியில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக்தளம், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 17 கட்சிகள் பங்கேற்றன. அதே நேரத்தில் ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சிரோன்மணி அகாலி தளம், தெலுங்கு தேசம் , பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்தன.

  கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதிகளும் தங்களது தலைவரின் கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தனர். இறுதியில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு சரத்பவார், மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “குடியரசுத் தலைவர் வேட்பாளராக சரத்பவாரை நிற்கக் கோரினோம். அவர் மறுத்துவிட்டார். ஆகவே, கட்சிகளின் தலைவர்கள் கலந்துபேசி வேட்பாளரை முடிவு செய்வார்கள். இன்னும் ஒரு வாரத்தில் பொது வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்துவிடுவோம்” என்று கூறினார்.

  மேலும் எதிர்க்கட்சிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த திரிணாமுல் காங். தலைவர் மம்தா பானர்ஜி, “குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பொது வேட்பாளராக போட்டியிட சரத்பவாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை சரத் பவார் மீண்டும் நிராகரித்துவிட்டார். பொது வேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

  2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கும் நிலையில், ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படுவது முக்கியமான விஷயமாகும். இது காலத்தின் அவசியம் என்றும் மம்தா வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் எழுந்த திடீர் புகார்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....