Sunday, March 17, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்வாட்சப் அப்டேட் என்னது ஸ்கீரின்ஷாட் எடுக்க முடியாதா?

    வாட்சப் அப்டேட் என்னது ஸ்கீரின்ஷாட் எடுக்க முடியாதா?

    புதிய அம்சங்களை வாட்சப் செயலியில் அறிமுகப்படுத்த இருப்பதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உலகில் பலராலும் அதிகளவு பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்றச் செயலி என்றால், அது வாட்சப் செயலியே. தற்போது, அனைத்து வயதினராலும் பயன்படுத்தப்படும் செயலியாகவும் வாட்சப் விளங்கி வருகிறது. அனைவரிடமும் வாட்சப் சென்று சேர்ந்ததன் முக்கியக் காரணம், பயன்படுத்த இது மிகவும் எளிதாக உள்ளதென்பதே. 

    இந்நிலையில், வாட்சப்பை மேலும் எளிமையாக்க புது அம்சங்களை வாட்சப் நிறுவனம் புகுத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    வெளிவந்துள்ள தகவலின்படி,

    • பயனர்கள் ஒரு வாட்சப் குழுவில் இருந்து எந்தவித அறிவிப்பும் (notification) இல்லாமல் வெளியேறலாம் (Exit ) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பயனர்கள் வாட்சப் செயலியை பயன்படுத்தும் போது தங்களது ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைத்து வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இது ரோல்-அவுட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வியூ ஒன்ஸ் மெசேஜ் அம்சத்தில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த ஸ்க்ரீன் ஷாட் அம்சம் சோதனை ஓட்டத்தில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பிற நபர்கள் வாட்சப் செயலியை பயன்படுத்தாத வகையில், தங்களது வாட்சப் செயலிக்கு பாஸ்வேர்டு செட் செய்யும் அம்சமும் கொண்டு வரப்பட்டுள்ளதாம்.

    முன்னதாக, நாம் அனுப்பும் தகவலை நீக்குகின்ற வசதியை ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு நாள்களாக வாட்சப் நிறுவனம் மேம்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    கடிகார கோபுரம் மீது பாயும் மின்னல்; அழகும் பயமும் ஒருசேர இணையத்தில் வைரலான காணொளி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....