Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்கடிகார கோபுரம் மீது பாயும் மின்னல்; அழகும் பயமும் ஒருசேர இணையத்தில் வைரலான காணொளி

    கடிகார கோபுரம் மீது பாயும் மின்னல்; அழகும் பயமும் ஒருசேர இணையத்தில் வைரலான காணொளி

    சவுதி அரேபியாவில் கடிகார கோபுரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கிய காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. 

    கடந்த சில நாள்களாகவே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவின் கடிகார கோபுரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கிய காணொளி சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

    இந்த காணொளியில், கடிகார கோபுரம் ஒன்றின் மீது மின்னல் தாக்குகிறது, பின்பு அந்த மின்னல் வானை நோக்கி விரிவடைகிறது. இதை காணும்போது அழகும் பயமும் ஒருசேர எழுகிறது. 

    தொடர் மழை மற்றும் பலத்த மின்னல் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

    கடந்த ஜூலை மாதத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளில் அதீத ஈரப்பதம் நிலவி வருகிறது. இந்தியாவில் பருவமழை குறைந்ததன் விளைவாகவே, இந்த அளவு ஈரப்பதம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, சவுதி அரேபியாவில் பரவலான பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்யும்.

    இவ்வாறு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    நீலகிரியில் புலி தாக்கி, 4 வயது சிறுமி உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....