Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசினிமா பாடல்களை பதிலாக எழுதி வைத்த மாணவர்; ஆசிரியர் செய்த செயல்!

    சினிமா பாடல்களை பதிலாக எழுதி வைத்த மாணவர்; ஆசிரியர் செய்த செயல்!

    தேர்வில் சினிமா பாடல்களை பதிலாக எழுதிய மாணவருக்கு ஆசிரியர் ஒருவர் மிக அருமையாக அறிவுரை கூறியுள்ளார். 

    பஞ்சாப் மாநிலம், மொகாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் மாணவர் எழுதிய பதில்களுக்கு ஆசிரியர் கொடுத்த மதிப்பெண்ணும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    தேர்வில் கேள்விகளுக்கு விடை தெரியாத மாணவர் ஒருவர், சினிமா பாடல்களை விடைகளாக எழுதியுள்ளார். அப்படி அந்த மாணவர், இந்தி மொழியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் கிவ் மிசாம் சன்ஷைன் பாடலும் அமீர் கான் நடித்த பிகே படத்தின் ‘பஹ்வன் ஹை கஹன் ரி டு’ ஆகிய பாடலின் வரிகளை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக எழுதியுள்ளார். 

    இதையடுத்து தேர்வுத்தாளை திருத்திய ஆசிரியர், சினிமா பாடல்களை கேள்விக்கு பதிலாக எழுதிய மாணவரின் யுக்தியை கண்டறிந்தார். இதையடுத்து, மாணவர் எழுதிய பதிலுக்கு ஆசிரியர் விடைத்தாளின் மேல் புறத்தில் இருந்து கீழ் வரை சிவப்பு பேனா கொண்டு கோடு வரைந்துள்ளார். மூன்று கேள்விகளுக்கு பூஜ்யம் என மதிப்பெண் வழங்கியுள்ளார். 

    தொடர்ந்து ஆசிரியர், அந்த மாணவருக்கு அறிவுரை வழங்கும் விதமாக, “நல்ல எண்ணம்; ஆனால், அது இங்கே நடக்காது” என எழுதியுள்ளார். இதையடுத்து மறுபக்கத்தில், இன்னும் நிறைய விடைகளை எழுதி இருக்க வேண்டும் எனவும் ஆசிரியர் நகைச்சுவையாக எழுதியுள்ளார். ஒட்டுமொத்தமாக பாடல்களை எழுதிய அந்த மாணவருக்கு பூஜ்யம்(0) மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 

    தேர்வில் பாடல்களை எழுதிய மாணவருக்கு ஆசிரியர் பூஜ்யம் (0) வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

    ‘உன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து வெளியிடுவேன்’ – பெண்ணை மிரட்டிய கும்பல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....