Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் தீ பிடிப்பு

    நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் தீ பிடிப்பு

    அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் தீ பிடித்து எரிந்தது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. 

    அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டு சென்றது. 

    இதையடுத்து, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தின் என்ஜினில் பயங்கர தீ பற்றிக்கொண்டது. நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியதில் தீ பிடித்தாக சொல்லப்படுகிறது. 

    இதைத்தொடர்ந்து, என்ஜினில் பற்றிய தீ அணைக்கப்பட்டுதோடு மாற்று விமானம் மூலமாக பயணிகள் பினிக்ஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் தீ பிடித்து எரிந்ததை தரையில் இருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்துள்ளனர். இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....