Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுக்கோட்டை கோயில் தேர் விபத்து; புதிய மேற்பார்வையாளர் நியமனம்

    புதுக்கோட்டை கோயில் தேர் விபத்து; புதிய மேற்பார்வையாளர் நியமனம்

    புதுக்கோட்டை கோயில் தேர் விபத்து நடந்ததையடுத்து, அக்கோவிலுக்கு புதிய மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட திருக்கோகர்ணத்தில் பிரகதம்பாள் திருக்கோகர்னேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலானது, மன்னர் காலத்து பழமை வாய்ந்த கோயில் ஆகும்.  புதுக்கோட்டை மாவட்ட கோவில்களில் முதன்மை கோயிலாகவும் இக்கோயில் திகழ்கிறது.

    இந்நிலையில், கடந்த ஜூலை 23-ம் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தேரோட்டம் தொடங்கி இரண்டு அடி இழுத்தவுடன் பிரகதாம்பாள் எழுந்தருளியிருந்த தேர் எதிர்பாராத விதமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில், 9 பக்தர்கள் காயமடைந்தனர். அதில் அரிமலம் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி (வயது 59) என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த 2 தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.

    இந்நிலையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (ஆகஸ்ட் 9) புதுக்கோட்டை வந்து விபத்துக்குள்ளான தேரை ஆய்வு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தார்.

    அப்போது, தேரோட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சக்கரத்தின் அடியில் திடீரென மரக்கட்டையை வைத்து தடுத்ததால், தேர் குப்புறசாய்ந்து விட்டது என தெரிவிக்கப்பட்டது.

    அதன் பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, தேர் விபத்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதன்படி, ஏற்கனவே பிரகதாம்பாள் கோயிலின் மேற்பார்வையாளர் கோயிலில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது கோயில் செயலாளர் ராமமூர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மேலும், புதிய மேற்பார்வையாளராக தட்சிணாமூர்த்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டார். தேர் விபத்தின் போது செயல் அலுவலர் மிகவும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகவும் தேரின் உறுதித்தன்மையை உறுதி செய்யவில்லை என்றும் கூறி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    அவருக்குப் பதிலாக பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் செயல் அலுவலர் புதுக்கோட்டை மாவட்ட செயல் அலுவலராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 பேரிடம் காசோலையை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

    தமிழகத்தில் தேர் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன், தஞ்சாவூரில் ஏற்பட்ட தேர் விபத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்  போதுமான அறிவுறுத்தல்கள் இன்மையே இது போன்ற தேர் விபத்துக்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....