Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநீலகிரியில் புலி தாக்கி, 4 வயது சிறுமி உயிரிழப்பு

    நீலகிரியில் புலி தாக்கி, 4 வயது சிறுமி உயிரிழப்பு

    நீலகிரி மாவட்டத்தில் புலி தாக்கியதில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

    வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மனிதன்-வன விலங்குகள் இடையேயான மோதல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    குறிப்பாக, நீலகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள குடியிருப்புகளை ஒட்டியே யானை, புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றன. இதனால், அப்பகுதியில் அதிகளவில் மனித வனவிலங்கு மோதல்கள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், நீலகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சமீப காலமாக புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஊட்டி அருகே அரக்காடு பகுதி அமைந்து உள்ளது. அந்த பகுதியில் புகுந்த புலி ஒன்று அப்பகுதி மக்களைப் பெரிதும் அச்சுறுத்தி வந்து உள்ளது. இந்நிலையில், புலி தாக்கியதில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் மேலும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், இச்சம்பவம் இன்று மதியம் சுமார் 12.00 மணியளவில் நடந்து உள்ளது.  அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுமியை வனவிலங்கு தாக்கி இழுத்து சென்றதாக அப்பகுதி மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு 12 மணி அளவில் தகவல் தெரிவித்து உள்ளனர்.

    தகவல் கிடைத்தைதை அடுத்து, காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, படுகாயத்துடன் மூச்சு பேச்சு இன்றி கிடந்த நிஷாந்த் என்பவரது மகள் 4 வயது சிறுமி சரிதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, அங்கு வனத்துறையினர் வந்து ஆய்வு செய்ததில், புலி அல்லது சிறுத்தை தாக்கியே சரிதா உயிரிழந்ததாக, உறுதி செய்யப்பட்டது.

    மேலும், புலியைக் கூண்டு வைத்து பிடிக்கும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மக்களை அச்சுறுத்தி வரும் புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கடலுக்கடியில் புதைந்துள்ள உலகப்போர் ஆயுதங்கள்; உயிரினங்களை கொல்லும் என ஆய்வறிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....