Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கடலுக்கடியில் புதைந்துள்ள உலகப்போர் ஆயுதங்கள்; உயிரினங்களுக்கு ஆபத்து

    கடலுக்கடியில் புதைந்துள்ள உலகப்போர் ஆயுதங்கள்; உயிரினங்களுக்கு ஆபத்து

    பால்டிக் கடல் பகுதியில் புதைந்திருக்கும் ரசாயன ஆயுதங்களால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. 

    பால்டிக் கடல் மத்திய தரைக் கடலைச் சார்ந்த ஒரு கடல் ஆகும். இது மத்திய ஐரோப்பாவுக்கும், வட ஐரோப்பாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இவை ரஷியர்களுக்கு மிகவும் தொலைவில் உள்ளது. 

    இந்த பால்டிக் கடல் தொடர்பாக, சமீபத்தில் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்தகவலின்படி, 2011 மற்றும் 2019-க்கு இடையில் போலந்து அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற குழு நடத்திய ஆய்வில், பால்டிக் கடலின் அடிப்பகுதியில் சுமார் 1 டன் பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்கள் கடலின் அடிப்பகுதியில் புதைந்துள்ளது. அவை, காலப்போக்கில் சிதைவடைந்து சுற்றுச்சூழல் பேரழிவைத் தூண்டுவதற்கு தயாராக உள்ளன என்றும் வெளிவந்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவை, காலப்போக்கில் சிதைவதால் சுற்றுச்சூழல் பேரழிவைத் தூண்டுவதற்கான அபாயகரமான சூழல் உருவாகி உள்ளது.

    வாயு குண்டுகள், கடலை 70 மீட்டர் சுற்றளவு வரை தண்ணீரை மாசுபடுத்துவதோடு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொல்லும் என போலந்து அகாடமி ஆஃப் சயின்ஸ் குழு நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

    மேலும், பால்டிக் கடலின் பல்வேறு பகுதிகளின் அடிப்பகுதியில், ரசாயன ஆயுதங்கள் முக்கியமாக கன்னிவெடிகள், பீப்பாய்கள் மற்றும் விமான குண்டுகள் என அனைத்தும் குப்பை கொட்டும் இடங்களை போன்று உள்ளதால் அவற்றின் “சரியான அளவை தற்போது மதிப்பிடுவது கடினம்’’. 

    “கடலில் கிடக்கும் டன் கணக்கான பீப்பாய்கள் கான்வாய் வழித்தடங்களில் சீரற்ற இடங்களில் கப்பல்களில் இருந்து வீசப்பட்டவை. அந்த ரசாயன ஆயுதங்களின் மரப்பெட்டிகள் அழுகும் வரை அவை நகர்ந்துள்ளது. மேலும் அவை, நீரோட்டங்களினால் சிதைந்து கடற்பகுதியில் படிந்துள்ளன”

    இவை இயற்கைக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்துவதற்கு தயாராக உள்ளன. குறிப்பாக, கடலின் பல்வேறு பகுதிகளில் அடியில், உள்ள வாயு வெடிகுண்டுகள் 70 மீட்டர் சுற்றளவு வரை தண்ணீரை மாசுபடுத்துவதோடு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொல்லும் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

    இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியின் நாஜி படைகளால் கைவிடப்பட்ட 40,000 முதல் 100,000 டன்கள் வரையிலான போர்க்கால ரசாயன ஆயுதங்கள் பால்டிக் கடலின் பல்வேறு பகுதிகளின் அடிப்பகுதியில் புதைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாக கல்வெட்டில் பொறிக்கப்பட்ட வணிக விமர்சனம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....