Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம்

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம்

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, உத்தரப் பிரதேசத்தில் 48 மணி நேரத்திற்கு பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

    ரக்‌ஷா பந்தனையொட்டி அரசுப் பேருந்துகளில் 48 மணி நேரத்திற்கு பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட்-11) ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படவுள்ளது. ஆண், பெண் இடையேயான சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில், ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில், ரக்‌ஷா பந்தனையொட்டி உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெண்கள் அனைவரும அரசுப் பேருந்துகளில், 48 மணிநேரத்திற்கு இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, யோகி ஆதித்யநாத், ஆகஸ்ட் 10-ம் தேதி பின்னிரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி பின்னிரவு 12 மணி வரை 48 மணி நேரத்திற்கு பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். பெண்களுக்கான இலவச பயணப் பேருந்துகள் அனைத்தும் முன்பக்கத்தில் தேசியக் கொடியுடன் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....