Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாக கல்வெட்டில் பொறிக்கப்பட்ட வணிக விமர்சனம்

    மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாக கல்வெட்டில் பொறிக்கப்பட்ட வணிக விமர்சனம்

    மனிதர்கள் தங்களுக்குத் தேவையான உணவை அறுவடை செய்யத் தொடங்கிய காலத்தில் இருந்தே விற்பனை எனும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. பண்டமாற்று முறைகள், வேலை செய்து உணவை வாங்குவது, பணம் கொடுத்து உணவை வாங்குவது எனப் பொருட்களை வாங்கும் முறைகளில் மாற்றம்  ஏற்பட்டாலும், விற்பனை என்பது மட்டும் மாறாமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகிறது. 

    விற்பனைக்கு உயிர்நாடியாக விளங்குபவர்கள் இருவர். பொருளை விற்கும் வணிகர்கள். விற்கும் பொருளை வாங்கும் வாடிக்கையாளர்கள். இந்த இருவரும் இல்லையெனில், விற்பனை என்பது என்றோ வழக்கொழிந்து சென்றிருக்கும். 

    ஒரு பொருள் அல்லது நிறுவனத்தின் தரத்தைப் பொறுத்தே அங்கு அதிக வாடிக்கையாளர்கள் வருவது உண்டு. நிறுவனத்தின் பொருட்கள் நன்றாக இல்லையென்றால், தங்களது கருத்துகளால் வாடிக்கையாளர்கள், அந்த நிறுவனத்தை உண்டு இல்லை என்றாக்கிவிடுவார்கள்.

    தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலத்தில், மின்னஞ்சல் வழியாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்தும், தங்களது விமர்சனங்களை வாடிக்கையாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், எந்த வித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில், ஏறத்தாழ சுமார் 3767 ஆண்டுகளுக்கு முன்னர், நன்னி (Nanni) எனப்படும் வாடிக்கையாளர், தான் வாங்கிய காப்பர் உலோகத்தின் தரம் குறைவாக இருந்ததால், காப்பர் உலோகத்தை விற்ற ஏ-நசீர் (Ea-Nasir) என்பவர் குறித்து விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

    தற்போதைய ஈராக்கில் உள்ள பாபிலோனில் 3767 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த வாடிக்கையாளரின் விமர்சனக் கல்வெட்டு, தற்போது இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ளது.

    இந்த கல்வெட்டானது அக்காடியன் (Akkadian) எனப்படும் மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்த அக்காடியன் மொழி கி.மு.30-ம் நூற்றாண்டிலிருந்து பண்டைய மெசப்டோமியாவில் பேசப்பட்டு வந்தது. தற்போது, இந்த மொழி வழக்கில் இல்லை.

    லட்டர்ஸ் ஃப்ரம் மெசபடோமியா (Letters from mesopotamia) என்ற புத்தகத்தை எழுதிய ஏ.லியோ ஓபென்ஹெய்ம் (A. Leo Oppenheim) என்பவர் இந்த கல்வெட்டை மொழி பெயர்த்துள்ளார்.

    நன்னி (Nanni), உலோகம் விற்கும் ஏ-நசீர்  (Ea-Nasir)க்கு எழுதிய விமர்சனக் கல்வெட்டின் விளக்கம்:

    ‘ஏ-நசீர்  (Ea-Nasir), சிறப்பான தரத்தில் உள்ள காப்பர் உலோகத்தை எனக்கு அளிப்பதாக நீ கூறினாய். ஆனால், நீ கூறியவாறு நடந்து கொள்ளவில்லை. தரம் குறைந்த காப்பர் உலோகத்தை எனது பணியாள் சிட்-சின்-ன்னிடம் (Sit-Sin) கொடுத்துவிட்டு ‘இதை எடுத்துக் கொள்வது என்றால் எடுத்துக்கொள்… தேவை இல்லையென்றால் சென்று விடு’ என கூறியுள்ளாய்.

    எதற்காக இத்தகைய அவமதிப்பை எனக்கு அளித்ததாய்? பை நிறைய பணத்துடன், எங்களைப்போன்ற மரியாதை மிக்க பணியாட்களை உலோகம் வாங்குவதற்கு அனுப்பினேன்.

    ஆனால், அவர்களை நீ அவமதித்தது மட்டுமல்லாது வெறும் கையுடனே அனுப்பியுள்ளாய். அதுவும் எனது எதிரி இருக்கும் பிரதேசத்தின் வழியாக எனது பணியாட்களை அனுப்பியுள்ளாய்.

    உன்னைத் தவிர, இதுவரை எந்த ஒரு வணிகரும் எனது பணியாளை இந்த அளவுக்கு அவமதிப்பு செய்தது இல்லை. உனக்கு நான் கொடுக்க வேண்டிய சிறிதளவு வெள்ளிக்காக நீ இவ்வாறு பேசுகிறாய். ஆனால், உனக்காக நான், அரண்மனைக்கு 1080 பவுண்ட் காப்பர் கொடுத்துள்ளேன்.

    உன் சார்பாக அரண்மனைக்கு நான் அளித்த காப்பருக்கு பதிலாக நீ என்ன செய்தாய்? பணப்பையுடன் எனது பணியாளை எதிரியின் பிரதேசத்தில் நிறுத்தி வைத்தாய். இனி உன்னிடம் இருந்து வரும் காப்பர் தரமாக இல்லையெனில், நான் வாங்குவதாக இல்லை.

    இன்றிலிருந்து எனக்கு தேவையான காப்பர் உலோகத்தை நானே தேர்வு செய்து கொள்ளலலாம் என்று இருக்கிறேன். நீ என்னை நடத்திய விதத்திற்காக உன்னை நான் நிராகரிக்கிறேன்’

    இவ்வாறு, அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்ட்டிருந்தது. 

    தனது பணியாளையும், தன்னையும் அவமதிக்கும் விதத்தில் நடத்தியதற்கும்,  தரக்குறைவான பொருளை அளித்ததற்கும், ஏ-நசீர்  (Ea-Nasir) என்னும் வணிகரை, நன்னி என்பவர் விமர்சித்து 3767 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த விமர்சனக் கடிதம் காலங்கள் கடந்து, பல்வேறு அழிவுகளுக்கு பிறகும் இவ்வளவு நாட்கள் நிலைத்து இருக்கிறது.

    இந்த கல்வெட்டின் மூலம், 3500 ஆண்டுகளுக்கு முன்பு எத்தகைய வணிகங்கள் நடந்தது என்பதையும், மக்கள் தங்கள் கருத்துகளை எப்படி பதிவு செய்தனர் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

    நிறைவடைந்த காமன்வெல்த்; இந்தியா எவ்வளவு பதக்கங்களை வென்றது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....