Sunday, March 17, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்வாட்சப் அப்டேட்; இனி ஒரு மணி நேரமல்ல இரண்டு நாட்கள்!

    வாட்சப் அப்டேட்; இனி ஒரு மணி நேரமல்ல இரண்டு நாட்கள்!

    வாட்சப் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு புதிய அப்டேட்டை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 

    உலகில் அதிகளவு அனைவராலும் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்றச் செயலி என்றால் அது வாட்சப் செயலியே. தற்போது, அனைத்து வயதினராலும் பயன்படுத்தப்படும் செயலியாகவும் வாட்சப் விளங்கி வருகிறது. அனைவரிடமும் வாட்சப் சென்று சேர்ந்ததன் முக்கியக் காரணம், பயன்படுத்த இது மிகவும் எளிதாக உள்ளதென்பதே. 

    இந்நிலையில், வாட்சப் நிறுவனம் அவ்வப்போது தங்களது பயனர்களை ‘அப்டேட்’ மூலம் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கும். அந்த வகையில்தான் குரூப் சாட், இமோஜி, ஸ்டேட்டஸ், ஸ்டிக்கர் எனப் பல அம்சங்களை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 

    தற்போதும், இப்படியாக ஒரு புதிய அம்சத்தை வாட்சப் நிறுவனம் தங்களின் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், அனுப்பிய தகவலை நீக்கும் முறையில்தான் வாட்சப் புதிய அப்டேட்டை நிகழ்த்தியுள்ளது. 

    முன்னதாக, ஒரு தகவலை நீங்கள் குரூப் சாட் அல்லது தனி நபருக்கு அனுப்பினால், அதை பின்பு, நீக்க வேண்டும் என்று நினைத்தால் இருவருக்கும் சேர்த்து நீக்கிக்கொள்ளலாம்.

    பொதுவாக, வாட்சப்பில் Delete for everyone, Delete for me என்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் Delete for everyone என்று செலக்ட் செய்தால், அந்த தகவல் யாருக்கும் காண்பிக்கப்படாது, தனி நபர் அல்லது குரூப் சாட்டிலிருந்து அழிந்து விடும். 

    Delete for me கொடுத்தால் உங்கள் சாட்டில் மட்டும் அந்த தகவல் நீக்கிவிடும். இந்த வசதி மற்றும் Delete for everyone வசதி, நீங்கள் தகவல் அனுப்பியதிலிருந்து 1 மணி நேரம் மட்டும் பயன்படுத்த முடியும். அதன் பின், அந்த வசதியை நீங்கள் பயன்படுத்த முடியாது. அதாவது, அந்தத் தகவல் அப்படியே இருக்கும். 

    இந்நிலையில், தற்போது செய்யப்பட்டுள்ள அப்டேட்டில் Delete for me மற்றும் Delete for everyone வசதியை நீங்கள் தகவல் அனுப்பியதிலிருந்து 2 நாள்கள் வரை பயன்படுத்தலாம். இந்த அப்டேட் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    இந்த பயன்பாட்டை உடனடியாக பெற உங்கள் வாட்சப்பை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஏன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....