Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஏன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?

    ஏன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது.

    இப்பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென ‘6 பி’ என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஏன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?

    • வாக்காளர் பட்டியலை, 100 சதவீதம் துாய்மையாக்குவதற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக, ஆதாரை இணைக்கும் பணியானது உறுதுணையாக அமைகிறது.
    • வாக்காளர்களின் ஆதார் விபரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் பாதுகாக்கப்படும்.
    • மேலும், போலி வாக்காளர்களைக் கண்டறிய இந்த நடவடிக்கை மிகவும் உறுதுணையாக இருக்கும்.

    எனவே, வாக்காளர்கள் தாமாகமுன்வந்து தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம் 6பி-யை பூர்த்தி செய்துவாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் இணைத்து கொள்ளலாம்.

    மேலும், வாக்காளர்கள் https:/www.nvsp.in என்ற இணையதளம், ‘ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன் ஆப்’ வாயிலாகவும் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.

    ஆதார் எண் இல்லாதவர்கள், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்ட அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், நிறைந்த கணக்கு எண் அட்டை (Pan Card), இந்திய கடவுச்சீட்டு, வங்கி, அஞ்சலகங்களில் புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களை சமர்ப்பித்து உறுதி செய்து கொள்ளலாம்.

    சிறப்பு சுருக்கமுறை திருத்தம்:

    2023-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளில் மாற்றம் செய்ய வேண்டிய பணிகள் நடைபெற உள்ளன. அதில், தகுதி உள்ள வாக்காளர்கள் பெயரை சேர்க்கவும், தகுதியில்லாதவர்கள் பெயரை நீக்கும் பணியும் நடைபெறும்.

    17 வயதை பூர்த்தி செய்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்னதாகவே மனு செய்யலாம். 18 வயது பூர்த்தி செய்யும் காலாண்டு முடிவில் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இதனால், 18 வயது நிரம்பியவர்கள் ஒரு வருடத்துக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

    இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை  திரிபுரா மற்றும் மராட்டியம் மாநிலங்களிலிருந்து தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும் இப்பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு மற்றும் உதவிகளை வழங்குவதற்காக பல்வேறு மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள்; கண்டுகொண்ட அமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....