Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்உடல் எடையை குறைக்க வேண்டுமா? உணவில் எவற்றை சேர்க்கனும்? எவற்றை தவிர்க்கனும்? - இதை படியுங்க!

    உடல் எடையை குறைக்க வேண்டுமா? உணவில் எவற்றை சேர்க்கனும்? எவற்றை தவிர்க்கனும்? – இதை படியுங்க!

    ஒரு நாளை தொடங்குவதற்கு, காலை உணவு மிக முக்கியமான ஒன்றாகும். எடை இழப்பை எளிதாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. காலை உணவு ஒரு நாளுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும், ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவை உண்ணும் அபாயத்தையும் குறைக்கிறது .இது அடிக்கடி தோன்றும் பசி உணர்வை கட்டுப்படுத்தும்.

    அதனால், ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை உட்கொள்வது மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உங்கள் காலை உணவை எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்!

    1. நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:

    எடை இழக்க விரும்புவோருக்கு, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நன்மை பயக்கும். குறிப்பாக, பகலில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும். அவற்றை, காலை உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும் .

    நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் வளர்சிதை மாற்ற நோய்க்கான அறிகுறிகளையும் தடுக்க நார்ச்சத்து உணவுகள் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    2. புரதச்சத்து நிறைந்த உணவுகள்:

    ஆய்வுகளின் அடிப்படையில், அதிக புரதச்சத்து நிறைந்து உள்ள உணவுகளை உண்பதின் முலம் அதிக உடல் எடையை குறைக்க இயலும் என்று நிரூபித்து உள்ளனர். இது உங்களுக்கு முழுமையாக உண்ட உணர்வை கொடுக்கிறது மற்றும் அதிகப்படியான பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.

    அதிக கலோரிகளை எரிக்கவும் புரதம் உதவுகிறது. இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியமான பிற ஊட்டச்சத்துக்களிலும் நிறைந்துள்ளன.

    3.கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்:

    உங்கள் காலை உணவில், அதிக கலோரி கொண்ட உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. கலோரி அளவைக் குறைப்பதினால், உங்கள் உடல் எடையைக் விரைவாக குறைக்க முடியும்.

    குறிப்பாக, உங்கள் காலை உணவுகளில் அதிக சர்க்கரை சேர்க்க வேண்டாம். அதிக அளவு சர்க்கரையை ஆரோக்கியமான ஓட்ஸ்யுடன் சேர்க்கும் பொழுது அந்த உணவு கண்டிப்பாக ஆரோக்கியமற்றதாகிவிடும்.

    இதேயே போன்று, காலை உணவுக்கு அப்பம் (pancakes) மற்றும் பேஸ்ட்ரிகளையும் கூட (pastries) தவிர்த்து விடவும்.

    4. சர்க்கரை சேர்த்த பானங்களை தவிர்க்கவும்:

    உங்கள் கலோரி அளவை அதிகரிப்பதில் பானங்கள் அல்லது சோடாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பதப்படுத்தப்பட்ட சர்க்கரை சேர்த்த பானம், ஒரு கிளாஸிற்கு 100 கலோரிகளைக் கொண்டிருக்கலாம். இதற்கான ஊட்டச்சத்து மதிப்பு மிக குறைவு அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

    இதற்கு பதிலாக, உடலிற்கு தேவையான முழு ஆற்றலை வழங்கும் ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான கலோரிகளைக் கொண்ட பழங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

    5. முழு உணவுகள் :

    முழு உணவுகளின் எடுத்துக்காட்டுகளில்: முழு தானியங்கள், கிழங்குகள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை அடங்கும். நீங்கள் முழு உணவுகள் எடுத்து கொள்ளும் போது, உங்கள் உடலின் கூடுதல் கிலோவை இழக்க அது நீண்ட காலத்திற்கு உதவுகின்றன.

    வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் பேகல்களை (bagels) போன்றவற்றை தவிர்த்து முழு தானியங்களை உட்கொள்ளவும். முழு தானியங்கள் அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன, மேலும் சில வகையான இதய நோய்களின் அபாயத்தையும் இவை குறைக்கின்றன.

    இது மட்டுமின்றி, முழு தானியங்களில் நார்ச்சத்து நிறைந்து உள்ளன. மலச்சிக்கலைக் குறைக்கின்றன மற்றும் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன.

    மைக்ரோபிளாஸ்டிக்; உலகம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரும் அபாயம்??

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....