Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இன்று எப்படி; பயணம் போகலாமா? சந்திராஷ்டமம் யாருக்கு? - இன்றைய ராசிபலன்கள் இதோ!

    இன்று எப்படி; பயணம் போகலாமா? சந்திராஷ்டமம் யாருக்கு? – இன்றைய ராசிபலன்கள் இதோ!

    பொதுப்பலன்:

    இன்று அதிகாலை 02.39 மணி வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

    மேஷம்:

    இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் கடினமான சூழ்நிலை காணப்படும். சாதகமான பலன்களைக் காண பொறுமை மற்றும் நம்பிக்கையான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நீங்கள் பணிகளை ஒழுங்குபடுத்தி திட்டமிட்டு நடக்க வேண்டும். கவனமற்ற வார்த்தைகளால் உறவு பாதிக்கும். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. இன்று மிதமான ஆரோக்கியம் காணப்படும். தியானம் மேற்கொண்டு அமைதியாக இருங்கள்.

    ரிஷபம்:

    இன்று நன்மையான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் சவால்கள் நிறைந்திருக்கும். என்றாலும் நீங்கள் இதனை சமாளித்து நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் துணையை புரிந்து கொள்வதன் மூலம் இனிமையான வார்த்தைகளை பேச இயலும். இன்று பண வரவு காணப்படும். உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் காணப்படாது.

    மிதுனம்:

    இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள். உங்களிடம் இன்று ஆற்றலும் உற்சாகமும் நிறைந்திருக்கும். இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    கடகம்:

    இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் அன்றாட பணிகளை கவனமுடன் கையாள வேண்டும். உங்கள் துணையுடன் தகவல் தொடர்பில் பிரச்சினை காணப்படும். நிதியில் ஏற்ற இறக்கங்கள் உங்களுக்கு கவலை அளிக்கும். அமைதியாக இருப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

    சிம்மம்:

    இன்று விருப்பமான பலன்களை அடைய நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். பணியிடத்தில் நீங்கள் சிறந்த பலனைக் காண முறையாக திட்டமிட வேண்டும். உறவில் மகிழ்ச்சி நிலவ உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும். உங்கள் செலவுப் பழக்கத்தில் கவனம் தேவை. சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். நீங்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்படலாம் கண் பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது.

    கன்னி: 

    இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பணியில் மிகுந்த திருப்தியை உணர்வீர்கள். உங்கள் துணயுடன் நல்லுறவை பகிர்ந்து கொள்வீர்கள். அதிக பண வரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உங்களிடம் காணப்படும் மனஉறுதி காரணமாக இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

    துலாம்:

    இன்று வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் பணியின் மூலம் நீங்கள் பல நற்பலன்களைக் காணலாம். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் சகஜமான அணுகுமுறை காரணமாக உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை பராமரிப்பீர்கள். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் சேமிப்பு நிலை உயரும். இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

    விருச்சிகம்:

    இன்று நீங்கள் உங்கள் உணர்வுகளையும் உணர்சிகளையும் கட்டுபடுத்த வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை கவனமாக மேற்கொள்ள நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். சில கருத்துக்களை உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளும் போது கடுமையாக நடந்து கொள்வீர்கள். நீங்கள் தேவையற்ற செலவுகளை செய்ய நேரும். அது உங்களுக்கு கவலை அளிக்கும். அசௌகரியம் காரணமாக ஆரோக்கியப் பிரச்சினை காணப்படும்.

    தனுசு:

    இன்று வளர்ச்சி நோக்கி செயலாற்ற உகந்த நாள். இன்று முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணி தொடர்பான பயணம் காணப்படுகின்றது. உங்களின் இனிமையான வார்த்தைகளால் உங்கள் துணையை மகிழ்ச்சியுறச் செய்வீர்கள். உங்கள் சேமிப்பை உயர்த்துவதற்கு நீங்கள் இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

    மகரம்:

    இன்று மிகவும் துடிப்பான நாளாக அமையும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். சக பணியாளர்கள் உதவிகரமாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். இன்று சௌகரியங்கள் அதிகம் காணப்படும். அதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    கும்பம்:

    இன்று முடிவுகள் எடுக்கும் போது அமைதியும் கட்டுப்பாடும் தேவை. அனுசரனையான அணுகுமுறை நன்மை அளிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. அதிகப் பணிகள் சுமையாக இருக்கும். உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை தவிர்ப்பது நல்லது. சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். உங்கள் செலவுகளில் கட்டுப்பாடு தேவை. ஆன்மீக ஈடுபாடு காரணமாக மன அமைதி கிடைக்கும். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    மீனம்:

    சில குடும்ப பிரச்சினை காரணமாக கவலையுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று கொடுக்கப்பட்ட பணிகளை முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் துணை உங்களிடம் முழு அன்போடு இருப்பார். இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.

    கொலை முயற்சியில் உயிர் தப்பிய ரஷ்ய அதிபர் புடின்: இராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....