Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கொலை முயற்சியில் உயிர் தப்பிய ரஷ்ய அதிபர் புடின்: இராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவல்!

    கொலை முயற்சியில் உயிர் தப்பிய ரஷ்ய அதிபர் புடின்: இராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவல்!

    இரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த இரு மாதங்களையும் தாண்டி, தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையிலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒருநாள் போருக்கு பல கோடிகளை இரஷ்யா, செலவு செய்வதாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் சில நாட்களுக்கு முன் வெளியானது.

    இது ஒருபுறம் இருக்க, இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நலம் தேறி வரும் நிலையில், மற்றுமொரு அதிர்ச்சி அளிக்கும் தகவலை உக்ரைன் இராணுவ உளவுப்பிரிவுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

    இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்வதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் முயற்சி நடந்தப்பட்டது எனவும், அதில் அவர் தப்பித்து விட்டதாகவும் உக்ரைன் இராணுவ உளவுப்பிரிவுத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அதிலிருந்து குணமடைய சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதியில்லாத சில தகவல்கள் வெளிவந்தன. அறுவை சிகிச்சையில், அவரது வயிற்றில் இருந்த திரவத்தை அகற்றியதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது.

    இந்நிலையில், உக்ரைன் இராணுவ உளவுப்பிரிவின் தலைவரான கைரைலோ புடானோவ் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில், ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு இடையே இருக்கும் கருங்கடல் மற்றும் இரஷ்யாவின் காஸ்பியன் கடலுக்கு இடையே இருக்கின்ற காகசஸ் என்ற இடத்தில் தான், இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், அம்முயற்சி தோல்வியையே சந்தித்தது. ஆகையால், புடின் உயிரோடு தப்பித்து விட்டார்.

    கடந்த மாதம் பிப்ரவரி 24 ஆம் தேதியில் உக்ரைன் மீது இரஷ்யா போரைத் தொடர்ந்தது. இப்போருக்குப் பிறகு தான் இந்த கொலை முயற்சி நடந்தது. இந்தக் கொலைவெறித் தாக்குதலில், புடின் மீது சரமாரியாக தாக்குதல் நடந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்து விட்டார் என்று கைரைலோ புடானோவ் தெரிவித்தார்.

    இரஷ்ய அதிபரை கொல்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், உக்ரைன் இராணுவ உளவுப்பிரிவுத் தலைவரான கைரைலோ புடானோவ் இதனை வெளியுலகிற்கு தெரிவித்துள்ளார்.

    வாட்டி வதைக்கும் வெயில்; பொழியுமா மழை? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....