Monday, March 18, 2024
மேலும்
    Homeவானிலைவாட்டி வதைக்கும் வெயில்; பொழியுமா மழை? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்!

    வாட்டி வதைக்கும் வெயில்; பொழியுமா மழை? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்!

    கத்திரி வெயில் மக்களை நன்கு வாட்டி வந்த நிலையில் ஒரு வாரம் முன்பு தமிழகம் முழுவதும் பெய்த மழையானது வெப்பத்தை சற்றே தணித்தது. ஆனால், தற்போதோ மழை இல்லாமல் வெயில் மட்டுமே மிகப்பெரிய வீச்சுடன் நிலவி வருகிறது.

    இந்நிலையில், மழையை மக்கள் எதிர்ப்பார்க்க, மக்களுக்கு ஏற்றவாறே சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிவிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்றுஇன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதேபோல் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமானது தெரிவித்துள்ளது. 

    அதோடு, சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. 

    மீண்டும் வேகமெடுக்கிறதா கொரோனா? என்ன சொல்கிறது பதிவுகள்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....