Monday, March 18, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஇன்று முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம்; முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம்!

    இன்று முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம்; முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம்!

    முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

    தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில், இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்கப்படும் என்றும், தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகத்தில், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இத்திட்டத்திற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்று, அரசு பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

    திறன்மிகு இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தி, நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்களின் செய்யப்படுத்தலை மேம்படுத்துவதே முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் நோக்கம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் 30 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளனர். இத்திட்டத்திற்காக 5 கோடியே 66 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தகுதி: பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை அறிவியல் போன்ற தொழிற் சார்ந்த இளங்கலை பட்டம் பெற்றவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கலை மற்றும் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் வேலை அறிவு கட்டாயம் வேண்டும்.

    ராஜஸ்தானின் கனவுகளை தகர்த்த கில்லர் மில்லர்; முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....