Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'இது தெரியாத சில முண்டங்கள்........' - ஆர்.எஸ். பாரதி அநாகரிகப் பேச்சு!

    ‘இது தெரியாத சில முண்டங்கள்……..’ – ஆர்.எஸ். பாரதி அநாகரிகப் பேச்சு!

    தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, திமுகவின் செயல்கள் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, சர்ச்சைக்குரிய கருத்தை பேசியிருப்பது திமுக கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து, கட்சித் தலைவர் ஆலோசித்து முடிவெடுத்த பிறகு அறிவிக்கப்படுவது தான் தேர்தல் அறிக்கை. இதில், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாலும், நிறைவேற்றவில்லை என்றாலும் அதற்கான முழு பொறுப்பும் கட்சித் தலைவரையே சேரும்.

    ”தேர்தல் அறிக்கையைத் தயார் செய்தது டி.ஆர்.பாலு தான். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் வீட்டு வாசலில் தான் மறியல் போராட்டம் நடத்த வேண்டும். இது தெரியாமல் சில முண்டங்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேட்க வேண்டியது ஸ்டாலினிடம் அல்ல; டி.ஆர்.பாலுவிடம் தான்” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் அநாகரிகமாக பேசியிருக்கிறார்.

    ஆர்.எஸ். பாரதியின் இந்த கருத்து, திமுக தலைவர் ஸ்டாலினா அல்லது டி.ஆர்.பாலுவா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், ”முண்டங்கள்” என்ற அநாகரிகமான பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ‌முன்னதாக, திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுகவின் ஓராண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசினார். அதில், ஆன்மீக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார், முதல்வர் அண்ணாதுரையைப் பற்றி தவறாக பேசிவிட்டார். அதனால் அவர் வெளியில் எங்குமே நடமாட முடியாத சூழ்நிலை உருவானது. அது மாதிரியான சூழ்நிலை அண்ணாமலைக்கு ஏற்படும் என்று எச்சரித்தார். ஆர்.எஸ்‌ பாரதி பேசியதையடுத்து, பாஜகவினர் கொதித்தெழுந்து கண்டனங்களை தெரிவித்து வந்தனர். தற்போது, முண்டங்கள் என்ற அநாகரிகமான பேச்சுக்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    ராஜஸ்தானின் கனவுகளை தகர்த்த கில்லர் மில்லர்; முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....