Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்உலகம்மீண்டும் போரா? கசிந்த சீன அதிகாரிகளின் உரையாடல்; பதற்றத்தில் தைவான்..

  மீண்டும் போரா? கசிந்த சீன அதிகாரிகளின் உரையாடல்; பதற்றத்தில் தைவான்..

  1.40 லட்சம் வீரர்கள், 953 கப்பல்கள், 1,653 தொகுதி தானியங்கி ஆயுதங்கள், 14 அவசர தொடர்பு மையங்கள் என்று தைவான் நாட்டின் மீது படை எடுக்கும் திட்டம் பற்றிய சீன அதிகாரிகளின் உரையாடல் சமீபத்தில் கசிந்துள்ளது.

  57 நிமிட கால அளவுள்ள இந்த உரையாடலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் தைவான் நாட்டினை ஆக்கிரமிப்பது தொடர்பாகப் பேசியுள்ளனர்.

  இந்த உரையாடலினை எல்யூடிஈ மீடியா என்ற யூட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. சீன வரலாற்றில் இதுபோன்ற ராணுவ உரையாடல் கசிவது இதுவே முதல்முறை என பேசப்படுகிறது.

  சீனா தைவான் பிரச்சனை மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது. 1949ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக உருவான பின்பும், அது சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கூறி வருகிறது. 

  இவ்வாறு கூறுவது மட்டுமல்லாமல், அந்நாட்டு எல்லைக்குள் அடிக்கடி அத்துமீறி நுழைவது, கலக்கத்தில் ஈடுபடுவது என அவ்வப்போது வரம்புமீறல்களை சீன அரசாங்கம் நடத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  பல முறை சமூக வலைத்தளங்களிலும் சீன-தைவான் பிரச்சனை பேசுபொருளாக இருந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில், தைவான் நாட்டினை அக்கிரமிப்பது தொடர்பான உரையாடல் வெளியானதால் தைவான் பகுதி பரபரப்பாகியுள்ளது.

  ‘போரினைத் தொடங்குவது பற்றி யோசிக்கக்கூடாது மேலும் தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை தகர்க்க வேண்டும். சீன நாட்டின் இறையாண்மை மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டினை பாதுகாக்க வேண்டும்’ என்ற வார்த்தைகள் அந்த உரையாடலில் இடம்பெற்றுள்ளது.

  மேலும் 15,500 புதிய ராணுவ அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது பற்றியும், ஏழு வகையான போர் முன்னெடுப்புகளை நடைமுறைப்படுத்துவது பற்றியும் கூறப்பட்டுள்ளது.

  இந்த உரையாடல் பற்றிய உண்மைத் தன்மை இதுவரை சரியாக கண்டறியப் படவில்லை. தைவான் நாட்டினை பயமுறுத்தும் நோக்கத்தில் இந்த உரையாடல் வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் இந்த உரையாடலானது சீனாவில் பொதுவாக நடத்தப்படும் சந்திப்புகளில் ஒன்றாகவும் இருக்கலாம் என்கிற எண்ணம் இருந்தாலும், இந்த உரையாடலானது உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு அமைப்புகளால் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது.

  இந்நிலையில், ஜப்பான் நாட்டில் க்வாட் சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், ‘தைவான் தாக்கப்பட்டால் அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்குமா?’ என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் ‘ஆம், அமெரிக்கா அந்த முடிவில் தான் உள்ளது’ என்று பதிலளித்துள்ளார்.

  மேலும் சீனாவானது ஆபத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

  பைடனின் இந்த பதிலுக்கு தைவான் நாட்டுத்தரப்பு நன்றி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, உக்ரைன்-ரஷ்யா போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ‘ஒரே சீனா’ என்கிற கொள்கையின் மூலம் தைவான் நாட்டினை ஆக்கிரமிப்பது தொடர்பான இந்த உரையாடல் கசிவு சற்று பதற்றத்தினை அதிகரித்துள்ளது.

  தொலைபேசி டூ ஸ்மார்ட் ஃபோன் – இப்படித்தான் பரிணாமம் அடைந்ததாம்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....