Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்விளையாட்டுஅசுர வேகத்தில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா: சிறப்புப் பார்வை!

  அசுர வேகத்தில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா: சிறப்புப் பார்வை!

  விளையாட்டில் வெற்றியை நோக்கித் தான் அனைவரது பயணமும் தொடர்கிறது. அதிலும், போட்டியில் முதலிடத்தைப் பிடிப்பதும், முதலிடத்தில் இருப்பவரை தோற்கடிப்பதுமே அனைவரது ஆசையாக இருக்கும். இதனை நிகழ்த்தி காட்ட போராடும் குணமும், மன தைரியமும் மிக அவசியம். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா உலகின் மிகச்சிறந்த சதுரங்க விளையாட்டு வீரராக வலம் வருகிறார். இதற்கு முக்கிய காரணம், ஏற்கனவே சதுரங்கப் போட்டியில், முதலிடத்தில் இருந்த மேகனஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்தியிருப்பது தான்.

  17 வயது கூட முழுமை பெறாத பிரக்ஞானந்தா, சதுரங்கப் போட்டியில் உச்சத்தில் இருப்பது, தமிழகத்திற்கு மிகவும் பெருமையாகும். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை செசபிள்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் சதுரங்கப் போட்டியில் பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சனை இரண்டாவது முறையாக வென்றார். முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில், ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் சதுரங்கப் போட்டியில், 39வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனை வென்றார் பிரக்ஞானந்தா. வெற்றி பெற்றாலும் மிகவும் எளிமையாக, தன்னடக்கத்துடன் இருப்பது இவரின் சிறப்பை உணர்த்துகிறது.

  கிராண்ட் மாஸ்டர்

  இளம் வயதிலேயே‌ கிராண்ட் மாஸ்டர் ஆன முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற சாதனையை இரண்டு முறை நிழ்த்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. 13 வயதை அடைவதற்கு முன்பே கிராண்ட் மாஸ்டராகும் தகுதியை நிரூபித்துள்ளார்‌.

  நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் வேகமான வளர்ச்சி தான் பிரக்ஞானந்தாவின் வெற்றி. இவரது தந்தை ரமேஷ்பாபு போலியோவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருபவர். தற்போது சென்னை கொரட்டூர் கிளையின் மேலாளராக உள்ளார். இவருடைய நான்கு வயது சகோதரி வைஷாலி ரமேஷ் பாபுவும் சதுரங்கப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர்.

  ஆரம்ப நாட்களில் சதுரங்க வகுப்பிற்கு தனது மகளைத் தான் சேர்த்தார். ஆனால், சதுரங்கப் போட்டிகளில் விளையாடுவதற்கு அதிக பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஏழ்மை நிலையால், மகனை சதுரங்க விளையாட்டுகளில் இருந்து விலக்கி வைத்தார் இவரின் தந்தை. ஆனால் 4 வயதில் இருந்தே தனது சகோதரியுடன் சதுரங்கம் விளையாடினார் பிரக்ஞானந்தா. சதுரங்கப் பலகையைப் பார்த்தபடியே இருப்பான். அவன் சிந்தனையை அதுவே மாற்றியிருக்க வேண்டும் என்று இவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

  மும்பையில் நடந்த ஒரு விளையாட்டு இதழின் ஆண்டு விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் புகழ்பெற்ற சதுரங்கப் போட்டி வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பேசினார். இளம் சதுரங்கப் போட்டி சாம்பியனான நிஹால் சரினுக்கு விருதை வழங்கிவிட்டு பேசுகையில், “என் காலத்தில் நான் மிக வேகமாக விளையாடுவேன். ஆனால் ஐந்து நிமிடத்தில் விளையாடும் ஆட்டத்தை நிஹால் ஒரு நிமிடத்தில் ஆடுகிறார்,” என்று கூறினார். இந்த வேகம் தான் இந்த இளம் வீரர்களின் பலம். பிரக்ஞானந்தா, கார்ல்சனை தோற்கடித்த போட்டிகள் 15 நிமிடங்களில் நடந்தன. மேலும், இவை ஆன்லைனில் நடந்த போட்டிகள். ஆனால், பிரக்ஞானந்தா போன்ற இளம் சாம்பியன் வீரர்களின் பெருமை இன்னும் தொடர வேண்டும் என்றால், அவர்கள் 90 நிமிடங்கள் நடைபெறும் முழு சதுரங்கப் போட்டியில் தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டும். அப்போது தான் அடுத்த உலக செஸ் சாம்பியன் இந்தியாவிலிருந்து உருவாவது  நிரூபனமாகும் என்று அவர் தெரிவித்தார்.

  பிரக்ஞானந்தாவின் ஆட்டம் எவ்வளவு பெரிய சவாலாக உள்ளது என்பது குறித்து அவரது பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் கூறுகையில், “ஒரு சதுரங்க விளையாட்டில், தொடக்க நேரத்தில் பிரக்ஞானந்தா தவறு செய்யவில்லை என்றால், அவர் நடுத்தர மற்றும் இறுதிப் பகுதிகளில் மிகவும் வலுவாக விளையாடுவார் என கருதலாம். கார்ல்சனுக்கு எதிரான இரண்டு வெற்றிகளிலும் அதைத்தான் அவர் நிரூபித்தார், ஆனால் உலக சாம்பியனைப் பொருத்தவரையில் அந்த இலக்கு மிகப்பெரியது,” என்றார்.

  தோர் லவ் & தண்டர் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியானது…!

  ஐபிஎல் குவாலிஃபையர்; சீறுமா குஜராத்? ராயலாக விளையாடுமா ராஜஸ்தான்?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....