Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தோர் லவ் & தண்டர் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியானது…!

    தோர் லவ் & தண்டர் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியானது…!

    மார்வெல் யுனிவெர்சின் அடுத்த திரைப்படமான தோர் லவ் & தண்டர் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் இன்று வெளியானது.. இத்திரைப்படத்தின் வில்லன் பற்றி இதுவரை தெரியாத நிலையில் இன்று வில்லன் பற்றிய தகவல்கள் இந்த ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது.

    கடந்த 2019ம் வரும் ஏப்ரல் மதம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படம் வெளியானது. இது மார்வெல் யுனிவெர்ஸின் முக்கியமான ஆறு கதாப்பாத்திரங்களான ஐயன் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், ஹல்க், ஹாவ்கை, ப்ளாக் விடோ ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும், அந்த கதாப்பாத்திரங்கள் முழுமை பெறும் விதமாகவும் எடுக்கப்பட்டது.

    ஐயன் மேன் மக்களைக் காப்பதற்காக இறந்துவிட, கேப்டன் அமெரிக்கா தான் விரும்பிய வாழ்க்கைக்கு சென்று வாழ்ந்துவிட்டு வயோதிகராய் திரும்புவார். ஹல்க் உருவத்தில் ஹல்காகவும் செயலில் பேனராகவும் மாறி விடுவார். பிளாக் விடோ சோல் ஸ்டோனை எடுக்க இறந்து விடவே, ஹாவ்கை தன குடும்பத்துடன் வாழ்ந்து வருவார்.

    இந்நிலையில் தோர் தனது மக்களுக்கு வால்கெய்ரி-ஐ அரசியாக்கி விட்டு தனது வருங்காலத்தினைத் தேடி கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி குழுவினருடன் சென்று விடுவார்.

    இந்நிலையில் தோர் என்னவானார்? அவரது பழைய உடல்நிலை திரும்பியதா? அவரது காதலி ஜேன் என்னவானார்? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக தோர் லவ் & தண்டர் திரைப்படம் வெளியாகவுள்ளது.

    படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியிலேயே ஜேன், லேடி தோராக தோன்றுவார் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல முதல் ட்ரைலரில் ஜேனின் லேடி தோர் கதாப்பாத்திரம் காட்டப்பட்டது.

    இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக நடிக்கும் கிறிஸ்டியன் பேல் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிக்கர்களிடையே எழுந்தது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக இன்று வெளியான ட்ரைலரில் கிறிஸ்டியன் பேல் இடம்பெற்றுள்ளார்.

    கோர் என்னும் கடவுள்களைக் கொல்லும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிறிஸ்டியன் பேல் எப்பொழுதும் போல தனது அசாத்தியமான நடிப்பினை வழங்கியுள்ளார். தைக்கா வைடிடி இயக்கத்தில் வெளிவரும் இப்படத்தில், கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி குழுவினர், ஜீயஸ், க்ராக் போன்ற கதாப்பாத்திரங்களும் உள்ளனர்.

    மிகவும் வண்ணமயமாக, அதே சமயம் வில்லன் கதாப்பாத்திரத்தினைக் காட்டும் போது கருப்பு வெள்ளை வண்ணத்திலும், தைக்கா வைடிடிக்கே உரிய நகைச்சுவையுடனும் வெளிவந்துள்ள தோர் ட்ரைலரானது சமூக வலைதளமெங்கும் பேசு பொருளாக மாறியுள்ளது.

    கோவில் கோவிலாக செல்லும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி!.. கல்யாண வைபோகமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....