Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சமந்தாவிற்கும் விஜய் தேவர்கொண்டாவுக்கும் விபத்து ஏற்பட்டது உண்மையா? பொய்யா?

    சமந்தாவிற்கும் விஜய் தேவர்கொண்டாவுக்கும் விபத்து ஏற்பட்டது உண்மையா? பொய்யா?

    சமந்தாவும் விஜய் தேவர்கொண்டாவும் குஷி திரைப்பட படப்பிடிப்பில் இருந்தபோது, இவர்கள் இருவரும் அமர்ந்திருந்த கார் விபத்துக்குளாகி இருவருக்கும் காயம் ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இந்த நிலையில் இந்த தகவல் தவறானது என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சமந்தாவும் விஜய் தேவர்கொண்டாவும் இணைந்து நடித்து வரும் காமெடி மற்றும் ரொமான்டிக் கலந்த திரைப்படம் குஷி. இப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கி வருகிறார். முதற்கட்டமாக காஷ்மீரில் குஷி திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. குஷி திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. 

    இந்நிலையில், காஷ்மீரில் உள்ள பிரபல நதியான லிட்டரில் சமந்தாவும் விஜய் தேவர் கொண்டாவும் குஷி திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் அமர்ந்திருந்த, பாதுகாப்பிற்காக காரில் கட்டி வைக்கப்பட்டிருந்த கயிறு அறுந்து, கார் நீருக்குள் மூழ்கியது என்று பல்வேறு ஊடங்கங்கள் செய்தியைப் பரப்பி வந்தன. 

    30 நாட்கள் வெற்றிகரமாக குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த திங்கட்கிழமை படக்குழுவினர் அனைவரும் திரும்பியுள்ளதாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட பின்பு தான் இரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வந்ததால் இரசிகர்களிடையே பல்வேறு கேள்வியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

    இதனிடையே விஜய் தேவர்கொண்டாவின் லிகர் திரைப்படம், திரைக்கு வரவிருக்கிறது. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்து வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம், இந்த மாதம் வெளியாகி இரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக இப்படத்தில், கதீஜா என்ற சமந்தாவின் பெயர் பிரபலமானது. 

    மீண்டும் போரா? கசிந்த சீன அதிகாரிகளின் உரையாடல்; பதற்றத்தில் தைவான்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....