Monday, March 18, 2024
மேலும்
  Homeவாழ்வியல்விவசாயம்குதிரைவாலி விதை உற்பத்தி: விவசாயிகளுக்கு பயனுள்ள சில நுணுக்கங்கள்!

  குதிரைவாலி விதை உற்பத்தி: விவசாயிகளுக்கு பயனுள்ள சில நுணுக்கங்கள்!

  ‌பருவநிலைக்கு ஏற்ப தகுந்த பயிர்களை பயிரிடுவதன் மூலம், மகசூலை அதிகரிக்க முடியும். பயிர்கள் பருவத்திற்கேற்ற சூழலை உள்வாங்கி நன்றாக வளரும். இதில், விவசாயிகளின் முக்கியப் பயிரான குதிரைவாலியில் விதை உற்பத்தியை எப்போது, எப்படி பயிரிட வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

  ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டங்கள் குதிரைவாலி விதைகளை உற்பத்தி செய்ய ஏற்ற பட்டங்கள் ஆகும். குதிரைவாலி ரகங்களில் விதைக்கு ஏற்றவையாக கோ 1, கோ (கேவி) 2 மற்றும் மதுரை 1 ரகங்கள் உள்ளன.

  இவற்றின் இனத் துாய்மையைப் பராமரிப்பது மிக அவசியமான ஒன்றாகும். ஆகையால், ஆதார மற்றும் சான்று விதை உற்பத்திக்கு 3 மீட்டர் பயிர் விலகு துாரம் இருந்தால், பிற ரகங்களின் இனக் கலப்பை தவிர்த்து விடலாம்.

  குதிரைவாலி, தன் மகரந்த சேர்க்கை செய்யும் ஒரு பயிராகும். சாகுபடி செய்வதற்கு, ஒரு எக்டேருக்கு 10 முதல் 15 கிலோ விதைகள் இருந்தால் போதுமானது. நடவின் போது, 15 செ.மீ. பயிர் இடைவெளி விடுவது அவசியம். ஒரு லிட்டர் அளவு தண்ணீரில், 20 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட்டை கலந்து விட வேண்டும். பிறகு இக்கரைசலில் குதிரைவாலி விதைகளை ஏறக்குறைய 6 மணி நேரம் ஊறவைத்து உலர்த்திய பிறகு விதைக்க வேண்டும்.

  ஒரு எக்டேர் நிலப்பரப்புக்கு 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 25 கிலோ தொழுஉரம் கலந்து, உரமாகத் தூவ வேண்டும். விதை விதைத்த 3 ஆம் நாளில் 0.5 கிலோ ஐசோபுரோட்ரோன் எனும் களைக்கொல்லியை தெளித்து விட வேண்டும். பிறகு, 15 வது நாள் மற்றும் 30 வது நாள் என இருமுறை களையெடுக்க வேண்டும். குதிரைவாலிக்கு குறைந்த அளவு நீரே போதுமானதால், அதிக நீர்ப்பாசனம் தேவையில்லை.

  வறண்ட சூழ்நிலை நிலவினால், பூங்கொத்து துளிர்விடும் தருணத்தில் மட்டும் நீர் பாய்ச்ச வேண்டும். விதைப்பயரில் பயிரிட்ட ரகத்தைத் தவிர்த்து, வேறு ரக விதைகள் இருப்பின், அவற்றை கலவன் என்கிறோம். இவற்றை உடனே நீக்கிவிட வேண்டும். இல்லையெனில், இனக்கலப்பு ஏற்பட்டு விடும்.

  கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு தான், அறுவடை செய்ய வேண்டும். விதைகளை 12% ஈரப்பதம் இருக்குமாறு காய வைக்க வேண்டும். விதை சுத்திகரிப்பு செய்யும் போது முற்றாத, உடைந்த விதைகள் மற்றும் கலவன் விதைகளில் உள்ள கல், மண் மற்றும் துாசியை அகற்றி விட வேண்டும்.

  முறையாக சாகுபடி செய்தால், எக்டேருக்கு 10 – 20 குவிண்டால் விதை மகசூல் பெறலாம். ஒரு கிலோ குதிரைவாலி விதைக்கு 2 கிராம் கார்பென்டசியம் மருந்தை கலந்து விட்டு, சுத்தமான துணிப் பைகளில் உற்பத்தி செய்த விதைகளை சேமிக்க வேண்டும். இம்முறையில், விதைகளை உற்பத்தி செய்து சேமித்தால், நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பாக இருக்கும்.

  சமந்தாவிற்கும் விஜய் தேவர்கொண்டாவுக்கும் விபத்து ஏற்பட்டது உண்மையா? பொய்யா?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....