Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கோவில் கோவிலாக செல்லும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி!.. கல்யாண வைபோகமா?

    கோவில் கோவிலாக செல்லும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி!.. கல்யாண வைபோகமா?

    தஞ்சாவூர் அருகே குலதெய்வ கோவிலில், இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்யப்போகிறார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். திருமணம் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வேண்டிக்கொண்டுள்ளனர்.

    நயன்தாரா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்து கோயில்களுக்கு சென்று வருகிறார். இந்து வழக்கப்படி விரதமிருக்கிறார். இந்து கடவுள்களை வணங்குகிறார். அதேபோல் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை உண்டு எனவேதான் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்.

    இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், மேல வழுத்துார் கிராமத்தில், ஆற்றங்கரை காஞ்சி காமாட்சியம்மன் கோவில், இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவில். விரைவில் நடிகை நயன்தாராவை திருமணம் செய்ய உள்ள விக்னேஷ் சிவன், அவருடன் நேற்று மதியம் இந்த கோவிலுக்கு வந்தார். நயன்தாரா கோவில் பிரகாரத்தில் பொங்கல் வைத்தார். தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

    கருவறையில் இருந்த காமாட்சியம்மன், குப்பாயி, மகமாயி உள்ளிட்ட தெய்வங்களை இருவரும் வழிபட்டனர். நயன்தாரா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்து, கிராம மக்கள், இளைஞர்கள் கூட்டம் அதிகம் வந்திருந்தது. இரண்டு மணி நேரம், கோவிலில் இருந்த கிராம மக்களுடன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

    ரசிகர்கள், நடிகை நயன்தாராவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். நடிகை நயன்தாராவை, விக்னேஷ் சிவன் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் கவனம் செலுத்தினார். அங்கிருந்து, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு அவர்கள் சென்றனர். கோவிலில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் யானைக்கு வாழைப்பழம் வழங்கி, ஆசிர்வாதம் பெற்றனர். அரைமணி நேரத்திற்கு பின், இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.

    விக்னேஷ் சிவனை கரம் பிடிப்பதற்காக கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் வைத்து வருகிறார் நயன்தாரா. இவர்களின் திருமணம் தடையின்றி நடைபெற வேண்டும் என்று அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

    நயன்தாராவுக்கு செல்லமாக உணவு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | Vignesh Sivan | Nayanthara – YouTube

    மீண்டும் போரா? கசிந்த சீன அதிகாரிகளின் உரையாடல்; பதற்றத்தில் தைவான்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....