Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பெட்ரோல் இல்லாத காரணத்தால் இழந்த பச்சிளம் குழந்தை; மக்கள் உருக்கம்!

    பெட்ரோல் இல்லாத காரணத்தால் இழந்த பச்சிளம் குழந்தை; மக்கள் உருக்கம்!

    இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து எரிவாயு நிறுவனங்களில் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தவர்களில் இருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் 2 மாதத்திற்கு முன்பு நடந்தது. இந்நிகழ்வு மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பகுதியில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவொன்று நேற்றைய தினம் திடீரென உயிரிழந்துள்ளது. இரண்டு நாட்களேயான பெண் குழந்தை, தாய் பால் குடிப்பதை தவிர்த்தமையினால், அக்குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவடைந்துள்ளது.

    எனினும், குறித்த நேரத்திற்குள் குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க பெற்றோர் முயற்சித்துள்ளனர். ஆட்டோவிற்கு போடுவதற்கு கூட பெட்ரோல் இல்லாத காரணத்தால் குழந்தையை அழைத்து செல்ல முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர். பெட்ரோல் கிடைப்பதற்கு ஒரு மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் தியதலாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது.

    இந்த உயிரிழப்பு தொடர்பில் தியதலாவை மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி ஷானக்க ரொஷான் பத்திரண, தனது ஃபேஸ்புக்கில் பதிவொன்றை பதிவேற்றியுள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது: “தியதலாவை மருத்துவமனையில் எனது 86வது பிரேத பரிசோதனை. அது வேதனையளிக்கும் மரணம். இரண்டு நாட்களேயான இந்த சிறு பெண் குழந்தை, தாய் பால் குடிப்பது குறைந்தமையினால், உடல் மஞ்சள் நிறமாகியது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்துள்ளது. ”

    ”ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு அழைத்து வர தந்தையின் ஆட்டோவிற்கு பெட்ரோல் கிடைக்க ஒரு மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு அழைத்து வரும் போது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு 22mg/dl குறைவடைந்து இருந்தது.

    தியதலாவை மருத்துவமனைக்கு அழைத்து வரும் போது அந்த பச்சிளம் குழந்தை சிரமப்பட்டு மூச்சு விட்டது . அதன்பின் அக்குழந்தையின் மூச்சும் நின்று விட்டது. அந்த ஒரு மணிநேரம் தாமதம் ஏற்படவில்லை என்றால், குழந்தையை காப்பாற்றி இருக்கலாம்.

    9 மாதங்கள் வயிற்றில் சுமந்து, 2 நாட்கள் மடியில் வைத்திருந்த குழந்தை, பெட்ரோல் ஒரு லிட்டர் இல்லாமையினால் உயிரிழந்தது என்பது வாழ்நாள் முழுவதும் வேதனையானது. சடலத்தை வெட்டுவதற்கும் கவலையாக இருந்தது. அனைத்து உறுப்புகளும் சிறந்த முறையில் வளர்ச்சி அடைந்த குழந்தை அது. இந்த அரசியல்வாதிகளுக்கு இடி விழ வேண்டும். இந்த மோசமான நாட்டில் வாழ்வதை விடவும், இந்த பச்சிளம் குழந்தை சென்றதே நல்லது என நான் பின்னர் யோசித்தேன்.” என்று கூறியிருந்தார்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், மக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். நாடொன்றிற்கு தேவையான அத்தியாவசிய மருந்து வகைகளுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

    எரிபொருள் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, உணவு பொருட்களின் விலையேற்றம் என இலங்கை வாழ் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

    ஐபிஎல் குவாலிஃபையர்; சீறுமா குஜராத்? ராயலாக விளையாடுமா ராஜஸ்தான்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....