Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியால் கலவரத்திற்கு வாய்ப்பு: சமாளிக்குமா இலங்கை!

    மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியால் கலவரத்திற்கு வாய்ப்பு: சமாளிக்குமா இலங்கை!

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடும் நிலையில், வீதியில் போராடும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், எரிபொருள் பெறுவதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வாங்குவதற்கும், மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். இச்சூழலில் மக்கள் மத்தியில் கலவரம் உருவாக வாய்ப்புள்ளது என்று, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது அனைவரிடத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இவர் கூறுகையில், ஏற்கனவே பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், ஜூன் மாதத்தில் கண்டிப்பாக தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி உருவாக வாய்ப்புள்ளது. அது மிகப்பெரிய அளவில் ஒரு கலவரமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.

    மேலும், எரிவாயு, மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை வாங்குவதற்காக, மக்கள் மத்தியில் இந்த கலவரம் உருவாகும் என்பது உறுதியாகும். கடந்த மே மாதம் 9 ஆம் நாள் அன்று ஏற்பட்ட கலவரம் போல் அல்லாமல், இம்முறை மக்களின் சொத்துக்களும் கொள்ளையிடப்படும். நாடு தற்போது அதள பாதாளத்துக்குள் தள்ளப்பட்டு விட்டது என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார்.

    மக்களை ஏமாற்றும் செயலை நிறுத்தி விட்டு, நாட்டை யாரும் அசைக்காத வகையில் கட்டியெழுப்ப சிறப்பான திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கு அரசியலில் உறுதித்தன்மை பெற வேண்டும். அனைத்து கட்சிகளையும் இணைத்து பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

    பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் வரையில், 2024 ஆம் ஆண்டு வரை எந்தவித தேர்தலையும் நடத்தாமல் இருக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. ஆகையால், அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்கும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங், இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், கொழும்புவில் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசயங்கள் தொடர்பாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனும் கலந்துரையாடலை நடத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

    தொலைபேசி டூ ஸ்மார்ட் ஃபோன் – இப்படித்தான் பரிணாமம் அடைந்ததாம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....