Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தீடிரென நடந்த துப்பாக்கிச் சூடு; பள்ளி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழப்பு!

    தீடிரென நடந்த துப்பாக்கிச் சூடு; பள்ளி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழப்பு!

    அமெரிக்காவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில், மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர் உட்பட 19 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது பற்றி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிகுந்த வேதனையுடன் பேசியுள்ளார்.

    அமெரிக்க நாட்டில் தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் 18 வயது நிரம்பிய மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். மர்மநபரின் இந்தச் துப்பாக்கிச் சூட்டில் ஏதும் அறியா பிஞ்சு 18 குழந்தைகள் மற்றும் 1 ஆசிரியர் உட்பட 19 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த மர்மநபரை, காவல்துறை சுட்டுக் கொன்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மர்ம நபர் கைத்துப்பாக்கி ஒன்றையும், AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்தார் என புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

    துப்பாக்கிச் சூட்டின் ஆரம்பத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் அப்பகுதியில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவராக இருக்கலாம் என்றும் அமெரிக்க உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டின் நேரப்படி செவ்வாய்க்கிழமை 11:32 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு தொடங்கியுள்ளது. தாக்குதல் நடத்திய மர்மநபர், சம்பவதின் போது தனியாகத் தான் செயல்பட்டார் என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

    துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர் ஈவா மிரெலெஸ் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அவருக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள் இருக்கிறார் என்றும், ஓட்டம் மற்றும் நடைபயணத்தை அவர் விரும்புவார் என்றும் கல்வி மாவட்ட இணையதளம் தெரிவிக்கிறது.

    மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என காவல்துறையைக் குறிப்பிட்டு அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில், அமெரிக்க எல்லைக்குள் கண்காணிப்புப் படையைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் சற்று தொலைவில் இருந்து தனது பணியை செய்துள்ளார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபரை, மிக விரைவாக சென்று சுட்டுக் கொன்றுள்ளார் என்று ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி முகமை தெரிவிக்கின்றது.

    துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், பாதுகாப்புக் கவச உடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 18 ஆம் தேதி, நியூயார்க் பஃபல்லோ பகுதியில், ஒரு மளிகைக் கடையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அந்த துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்பட்ட சந்தேக நபரும், கைத்துப்பாக்கியுடன் பாதுகாப்பு உடை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    துப்பாக்கிச் சூடு குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
    பேசுகையில், “இந்தக் குழந்தைகளுக்காக அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். ஏதுமறியாத அழகிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், ஒரு போர்க்களத்தைப் போல, தன் நண்பர்கள் கொல்லப்பட்ட காட்சியையும் குழந்தைகள் நேரில் பார்த்துள்ளனர். இனி காலம் முழுக்க இதே நினைவுகளுடன் இந்தக் குழந்தைகள் வாழ வேண்டியிருக்கும்” என்று வேதனையுடன் பேசினார்.

    ராஜஸ்தானின் கனவுகளை தகர்த்த கில்லர் மில்லர்; முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....