Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமீண்டும் வேகமெடுக்கிறதா கொரோனா? என்ன சொல்கிறது பதிவுகள்?

    மீண்டும் வேகமெடுக்கிறதா கொரோனா? என்ன சொல்கிறது பதிவுகள்?

    கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்துப்பட்டது.

    ஆனால், தற்போது மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் அடுத்த அலை ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கும் என, முன்னரே பல ஆய்வுகள் தெரிவித்தன. தற்போது அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பு, அடுத்த அலைக்கான ஆரம்பமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது, இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும் 2,124 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் 2,022 நபர்களுக்கும், நேற்று 1675 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக இன்றும் 2,000-ஐக் கடந்துள்ளது கொரோனா பாதிப்பு. இந்த எண்ணிக்கையையும் சேர்த்து, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது, 4 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 192 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதைப் போலவே, கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 17 நபர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5,24,507 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 1977 நபர்கள் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை மொத்தம் 4,26,02, 714 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது வரை இந்தியாவில் 14,971 நபர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிற்கு எதிராக செயல்படும் தடுப்பூசியானது இந்தியாவில் இதுவரை 192.67 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தானின் கனவுகளை தகர்த்த கில்லர் மில்லர்; முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....