Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'பாரத் பந்த்' எனும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் - தகவல்கள் உள்ளே!

    ‘பாரத் பந்த்’ எனும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் – தகவல்கள் உள்ளே!

    மின்னணு வாக்கு இயந்திரத்தினை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய குடியுரிமைச் சட்டத்தினை எதிர்த்தும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து மறுத்துவருவதைக் கண்டித்தும் இன்று அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தின் ஊழியர்கள் கூட்டமைப்பு (பிஏஎம்சிஇஎப்) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ‘பாரத் பந்த்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் பற்றி பேசிய பிஏஎம்சிஇஎப்-ன் தலைவர் வாமன் மேஷ்ராம், ‘எங்களது இந்த பாரத் பந்திற்கு ராஷ்ட்ரிய பரிவர்தன சங்கம், பாரத் முக்தி சங்கம், பகுஜன் முக்தி சங்கம் மற்றும் பல சங்கங்கள் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளன.’ என்று கூறியுள்ளார்.

    மேலும், தங்களது போராட்டம் கட்டாயம் வெற்றிபெறும் எனவும், பொதுமக்கள் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் ‘பாரத் பந்த் என்னும் ஹாஷ்டேக்கினை பிரபலமாக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இந்த வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ‘சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்துவது பற்றிய நடவைக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம், மேலும், எந்த வித தவறும் ஏற்படாத வகையில் அதனை நடைமுறைப்படுத்தும் செயலிலும் நங்கள் இறங்கவுள்ளோம்.’ என்று கூறியுள்ளார்.

    இந்த வேலை நிறுத்தப் போராட்டத்த்திற்கு பிஜேபி, காங்கிரஸ் போன்ற பெரிய காட்சிகள் எதுவும் ஆதரவு தெரிவிக்காத நிலையில், இந்த போராட்டமானது உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தின் பகுதிகளில் மட்டுமே சில பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பிற மாவட்டங்களில் இந்த போராட்டமானது பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.

    அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் எப்பொழுதும் போல இயங்குகின்றன. எந்த விதமான தடங்கலும் ஏற்படாமலிருக்க ஆவண செய்யப்பட்டுள்ளது என்று வங்கிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளும் கல்லூரிகளும் வழக்கம் போல இயங்குகின்றன. உள்ளூர் ரயில்கள், ஆட்டோ, ரிக்ஷாக்கள் என அனைத்தும் எப்பொழுதும் போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம்; முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....