Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபிள்ளைகளா...பள்ளிக்கு போக தயாராகுங்க; வெளிவந்த அறிவிப்பு!

    பிள்ளைகளா…பள்ளிக்கு போக தயாராகுங்க; வெளிவந்த அறிவிப்பு!

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடியே இருந்தன. மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் தங்களது பாடங்களைப் புரிந்து கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

    தமிழக அரசு தரப்பில் அனைத்து மாணவர்களும் கல்வி கற்கும் விதமாக கல்வி தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. கடும் சிரமங்களுக்கு இடையே மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் இணையவழி கல்வி கற்றலில் சிரமங்களை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததிலிருந்து பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு தற்போது முழுமையாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து தற்போது ஆண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் அடுத்த கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறக்கும் தேதியினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவித்துள்ளார். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு ஜூன் மாதம் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 20ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுமென அறிவித்துள்ளார்.

    மேலும், பள்ளிக் கல்வித்துறையானது சில புதிய வசதிகளை இந்த வருடம் கொண்டு வந்துள்ளது. அதில் ஆசிரியர்களுக்கான விடுமுறை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் செயலியும் ஒன்று.

    இந்த வருடத்திலிருந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணையினையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான பயிற்சி வகுப்புகளில் கலந்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கூறியுள்ளார்.

    மேலும் 2022-23 காலாண்டிற்கான பொதுத் தேர்வுகளின் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. 

    இதன்படி, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 13ம் தேதியும். 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 14ம் தேதியும், 10ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 3ம் தேதியும் தொடங்குமென கூறப்பட்டுள்ளது.

    இன்று முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம்; முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....