Saturday, March 16, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்ட்விட்டரில் தவறு செய்தால் இனி திருத்திக்கொள்ளலாம் - விரைவில் அறிமுகமாகும் எடிட்டிங் வசதி

    ட்விட்டரில் தவறு செய்தால் இனி திருத்திக்கொள்ளலாம் – விரைவில் அறிமுகமாகும் எடிட்டிங் வசதி

    ட்விட்டரில் எடிட்டிங் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இணைய உலகத்தில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் தளம் இருந்து வருகிறது. ட்விட்டர் தளம் அவ்வப்போது a அதன் சேவையில் புதிய மாற்றங்களை புகுத்தி வருகிறது.

    அந்த வகையில், ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி, பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த வசதியை கடந்த மாதம் சோதனை முறையில் ட்விட்டர் ப்ளூ (Twitter Blue) சந்தாதாரர்களுக்கு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. அதாவது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் 5 டாலர் வரை கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், ட்விட்டரில் எடிட்டிங் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. எடிட்டிங் பட்டன் எவ்வாறு வேலை செய்யும் நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது. 

    இதன்படி, எடிட் செய்து 30 நிமிடங்களில் பதிவை சில முறை திருத்த முடியும். அந்த பதிவில் கடைசியாக திருத்தப்பட்டது என அந்நேரமும் பதிவில் காட்டப்படும். இதன் வாயிலாக எடிட் செய்யப்பட்டது என்பதை பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த வசதி சோதனை அடிப்படையில் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், விரைவில் இதர பயனர்களின் பயன்பாட்டிற்கும் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க:உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம்; சிட்டாக பறந்து சாதனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....