Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தொடரும் 'ஓசி' பஸ் பிரச்சனை; மழுப்பலாக பதிலளித்த அமைச்சர் பொன்முடி

    தொடரும் ‘ஓசி’ பஸ் பிரச்சனை; மழுப்பலாக பதிலளித்த அமைச்சர் பொன்முடி

    ‘நான் விளையாட்டுத்தனமாக சும்மா பேசியதை பெரிதாக்குகிறார்கள்’ என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒரு கூட்டத்தில் மக்களை பார்த்து, ‘உங்களுக்கு ரேஷன் கார்டுக்கு 4,000 ரூபாய் கொடுத்தாரு; வாங்குனீங்களா இல்லையா.. வாய திறங்க; இப்போ பஸ்ல எப்படி போறீங்க, எல்லாரும் ‘ஓசி’ பஸ்ல போறீங்க’ என்று பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அமைச்சர் பொன்முடி பெண்களை ஓசி பஸ் என்று கூறியதற்கு, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருத்தனர்.

    இந்நிலையில், இன்று (செப்டம்பர் 30) அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலதித்தார்.

    அப்போது பதிலளித்த அவர், ‛நான் விளையாட்டுத்தனமாக சும்மா பேசியதை பெரிதாக்குகிறார்கள். வேறு எந்த எண்ணத்திலும் பேசவில்லை. அதை பெரிதுபடுத்த தேவையில்லை’ என மழுப்பலாக தெரிவித்தார்.

    இவரின், இந்தப் பேச்சு மேலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

    இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி பெண் வயிற்றில் ‘ஓசி’யில் பிறந்தவர்தான் – நடிகை கஸ்துாரி காட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....