Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்எங்கப்பா ஓடுது பொன்னியின் செல்வன் - கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேள்வி!

    எங்கப்பா ஓடுது பொன்னியின் செல்வன் – கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேள்வி!

    பொன்னியின் செல்வன் திரைப்படம் குவாஹாட்டியில் எந்த திரையரங்கில் தமிழில் திரையிடப்பட்டுள்ளது என்ற கேள்வியை ட்விட்டரில் அஸ்வின் எழுப்பியுள்ளார். 

    தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் இருபது ஓவர் தொடரின் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. 

    இந்த ஆட்டத்தில் தமிழக வீரர் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி, சொற்ப ரன்களையே எதிரணிக்கு விட்டுக்கொடுத்தார். இதையடுத்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான 2-வது இருபது ஓவர் போட்டி வரும் அக்டோபர் 2-ம் தேதி குவாஹட்டியில் நடைபெற உள்ளது. 

    இதையும் படிங்க:பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்களோடு கண்டுகளித்த நடிகர்கள்… குதூகலத்தில் ரசிகர்கள்!

    இந்நிலையில், கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகரான அஸ்வின் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் காண ஆர்வமாக உள்ளார். ஆனால், அவர் குவாஹாட்டியில் உள்ளார். இதனால், பொன்னியின் செல்வன் திரைப்படம் குவாஹாட்டியில் எந்த திரையரங்கில் தமிழில் திரையிடப்பட்டுள்ளது என்ற கேள்வியை ட்விட்டரில் அஸ்வின் எழுப்பினார். 

    இந்தக் கேள்விக்கு, குவாஹாட்டி சென்ட்ரல் மாலில் உள்ள சினிபொலிஸ் திரையரங்கில் மதியம் ஒரு மணிக்கு தமிழில் பொன்னியின் செல்வன் திரையிடப்படுவதாக ரசிகர் ஒருவர் பதிலளித்தார். அதற்கு ‘அது பயிற்சிக்கான நேரம், இன்னும் அதிக காட்சிகளுக்குத் திரையிட்டிருக்கலாம்’ என பதில் தந்தார் அஸ்வின். அஸ்வினின் இந்த ட்விட்டுகள் பலரையும் ரசிக்கவைத்து வருகிறது. 

    முன்னதாக, பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....